புத்தாண்டு பலன் 2025: நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் வரும் புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்கள், அதிர்ஷ்டங்களைத் தரப் போகிறார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். (lucky zodiac signs)
நவக்கிரகம் எனும் ஒன்பது கிரகங்களுக்கும் தலைவனாக விளக்கக் கூடியவர் குரு பகவான். மாதத்திற்கு ஒருமுறை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யக் கூடியவர். சிம்ம ராசிக்கு அதிபதியாகிய திகழ்ந்து வருகிறார் சூரிய பகவான். ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆகும்போதுதான் தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் அனைத்து செயல்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.
புத்தாண்டு பிறக்க 13 நாட்கள் மட்டுமே உள்ளன. வரும் புத்தாண்டு பல புதுமைகளையும், முன்னேற்றத்தையும் அள்ளித் தர வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாகவும் இருக்கும். அந்த வகையில், வருகின்ற 2025 புத்தாண்டில் கும்ப ராசியில் சூரிய பகவான் பிப்ரவரி மாதம் நுழைகின்றார். கும்ப ராசியானது சூரிய கவானின் சொந்த ராசியாகும். எனவே, கும்ப ராசியின் பயனானது அனைத்து ராசிகளிலும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
சூரியன் கும்ப ராசிக்குள் நுழைவதால் சில ராசிக்காரர்கள் சுபயோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் இந்த ஆண்டு அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப்போகிறார்கள் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி (New year rasi palan for mesham): 2025 புத்தாண்டில் சூரிய பகவான் கும்ப ராசியில் பயணிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது. பண வரவு உண்டாகும். பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதற்கான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எந்த விஷயங்களை எப்படி எதிர்கொள்ளலாம் என சரியாகத் திட்டமிடுவீர்கள். வியாபாரம், தொழிலில் லாபம் ஏற்படும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பவ உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வியாபரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடி வரும். போக்குவரத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீண்டகாலமாக செய்து வந்த முதலீடுகள் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியடைவீர்கள். எதிர்பார்த்த அனைத்து காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் உங்களை விட்டு விலகும்.
சிம்ம ராசி (New year rasi palan for simmam): சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிபதியான சூரிய பகவானால் 2025 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் கொட்டும். நிதி தொடர்பான ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் என்ற எண்ணம் தோன்றும். விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளும் சரியாக அமையும். ஆக்கப்பூர்வமான வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்னைகள், சிக்கல்கள் அனைத்தும் தூசாகப் பறக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு ராசி (New year rasi palan for dhanusu): மகத்தான மாற்றங்களை சூரிய பகவான் இந்த புத்தாண்டில் தரப் போகிறார். வியாபாரம் தொடர்பான புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி தொடர்பான நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். புதியதாக செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக திருமணமாகதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். பண வரவில் எந்த குறைவும் ஏற்படாது. அதிர்ஷ்டமான ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்.