சென்னை: விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.
நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணிக்கு நேரம்தான் ஆகிறது.
இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை-- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது.
மேக் இன் திட்டத்தின் கீழ் இந்த ரயில்கள் தயாரிக்கப்டுவதால் நாட்டின் சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வடிவமைககப்பட்ட ஒரு முக்கிய தேசிய திட்டம் ஆகும். முதல் வந்தே பாரத் ரயில் உத்தரப்பிரதேசத்தில் மொராதாபாத்தில் சோதனை ஓட்டம் 2018 இல் நடந்தது. இதனால் ட்ரைன் 18 என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் என்ஜின் இல்லா ரயில். டெல்லியிலிருந்து 752 கி.மீ. தூரத்தில் உள்ள வாரணாசியை அடைய 8 மணி நேரம் மட்டுமே ஆகும். தானியங்கி கதவுகள் உள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஒரு மைக் இருக்கிறது. ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அதன் வழியே ஓட்டுநருடன் பேச முடியும். கழிவறைகளில் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
என்னதான் வசதிகள் இருந்தாலும் இந்த ரயில்களில் படுக்கை வசதி இல்லாதது மக்களை பெரிதும் கவலைக்குள்ளாகியது. அனைத்து பெட்டிகளிலும் ஏசி, எந்தவித இடையூறும் இல்லாத பயணம், ஆனாலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருப்பது போல் பெர்த் வசதி இல்லையே என்ற கவலை இருந்தது.
ஏசி சேர் கார், எக்கனாமி சேர் கார் என இரு இருக்கை வசதிகள் இருந்தாலும் படுக்கை வசதி இல்லை. வரும் பொங்கல் பண்டிகையின் போது வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா மயிலாப்பூரில் கூறியிருப்பதாவது: படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை இந்தாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
சென்னையிலிருந்து டெல்லி வரை வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் புதிய வந்தே பாரத் ரயில்கள் தயார் நிலையில் உள்ளது. இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.