கோவை மக்களே முக்கிய அறிவிப்பு.. இந்த வழியா போகாதீங்க.. நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

post-img
கோவை: கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனி முதல் கோவில்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளதால் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். கோவை மாநகர காவல் துறை எல்லைக்கு உட்பட்ட துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 23 ஆம் தேதி (நாளை) முதல் நடைபெற உள்ளதால் துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வாகனங்கள் மற்றும் கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி செல்லும் வாகனப்போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது. இலகு ரக வாகனங்கள்: துடியலூர் NGGO காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம். வெள்ளக்கிணர். வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, NGGO காலனி கணபதி நகர் சென்று வலதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம். கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி வழியாக மேட்டுப்பாளையம் 6500 செல்லும் வழித்தடம் தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்றாக. வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையம் வழியாக கணபதி நகரில் இடது புறம் திரும்பி வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம். கனரக வாகனங்கள்: துடியலூர் NGGO காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது மாற்றாக, வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம். வெள்ளக்கிணர். சரவணம்பட்டி ரோடு, சுண்ணாம்புக்காலவாயில் இடதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் சென்று கோவில்பாளையம் செல்லலாம். கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையத்தில் இடது புறம் திரும்பி கண்ணாம்புக்காலவாய் வழியாக சரவணம்பட்டி சாலையில் வலது புறம் திரும்பி வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்களுடைய பயணங்களை திட்டம் போட்டுக் கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post