பனையூர் பங்களாவை தாண்டி வெளியே வாங்க! அடுத்தடுத்து விழுந்த அடி.. விஜய்க்கு போன பெரிய மெசேஜ்!

post-img
சென்னை: பனையூர் பங்களாவை தாண்டி விஜய் வெளியே வர வேண்டும்.. அரசியலுக்கு வந்துவிட்டால் மக்களை நேரடியாக பார்க்க வேண்டும் என்று விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் தெரிவித்து உள்ளார்களாம். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து இன்னும் 1 வருடம் கூட ஆகவில்லை. கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த கட்சியில் பல அரசியல் ரீதியான சிக்கல்கள் நிலவி வருகிறதாம். இது தொடர்பாக விஜய்க்கும் முக்கியமான சில தகவல்கள் சென்றுள்ளதாம். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு முக்கியமான ஒரு புகார் சென்றுள்ளதாம். விஜய் பொதுவாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வருவதே இல்லை. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.. அதேபோல் நேரடியாக புயல் பாதித்த இடங்களை கூட பார்க்கவில்லை. ஏன் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை. பெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும், என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டார். ஆனால் சம்பவ இடத்திற்கு விஜய் சென்று எந்த சந்திப்பும் மேற்கொள்ளவில்லை, நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை. முன்னதாக தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய் இரங்கல் அறிக்கையே தாமதமாக தந்தார். அவர்களின் குடும்பத்தாரை நேரில் கூட சென்று சந்திக்கவில்லை. அதேபோல் அவர்களுக்கும் கூட பனையூருக்கு அழைத்து நிவாரணம் கொடுத்தார். அவர்களையும் கூட நேரில் சென்று சந்திக்கவில்லை. சரி அதோடு இருக்கலாம் என்றால் பெரியார் நினைவு நாளுக்கு இன்று வெளியே சென்று மாலை போடவில்லை. எல்லாமே பனையூர் பங்களாவில் உள்ள வீட்டில் மாலை போடுவதோடு விஜய் நிறுத்திக்கொள்கிறார். விஜய்க்கு அட்வைஸ்: இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு இது தொடர்பாக அட்வைஸ் சென்றுள்ளதாம். நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். ஒரு சுவற்றுக்குள் இருக்க ஹீரோ கிடையாது. நீங்கள் மக்கள் தலைவராக இருக்க மக்களை சந்திக்க வேண்டும். பனையூர் பங்களாவை தாண்டி வெளியே வாங்க அதுதான் முக்கியம். மக்களை அடிக்கடி சந்தியுங்கள். முக்கியமாக பத்திரிகையாளர்களை சந்தியுங்கள். உங்களின் நிலைப்பாடுகளை அறிவியுங்கள். இல்லையென்றால் மக்களிடம் சென்று சேருவது எளிதாக இருக்காது என்று விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர்.. அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தெரிவித்து உள்ளார்களாம்.

Related Post