டிடிஎப் வாசனுக்கு புதிய சிக்கல்.. ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை சட்டவிரோதமா?

post-img

சென்னை: விபத்தின் போது, டிடிஎப் வாசன் பயன்படுத்திய ஹெல்மெட் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இந்த ஹெல்மெட்டை சட்ட விரோதமாக அவரது நண்பர் கொண்டு வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். பைக்கில் அதிவேகத்துடன் செல்வதோடு சாலை விதிகளை மதிக்காமல் பைக்கில் சாகசம் செய்து யூ-டியூப்பில் வீடியோ பதிவிட்டு வருகிறார். அவரது வீடியோக்களை பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது ரசிகர்களாவும் உள்ளனர். அவ்வப்போது பைக் சாசகம் செய்து சர்ச்சையில் சிக்குவது டிடிப் வாசனின் வாடிக்கையாக உள்ளது.


தற்போது மஞ்சள் வீரன் என்ற பெயரில் பட்ம் ஒன்றிலும் டிடிஎப் வாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில், டிடிஎப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் பைக்கில் அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. சரியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவரது பைக் விபத்தில் சிக்கியது.


காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது தனது பைக்கில் வீலீங் செய்தார். அப்போது பைக் தடுமாறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வாசன் தூக்கி வீசப்பட்டார் பைக் பலமுறை உருண்டது. இதில் டிடிஎப் வாசன் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விட்ருங்க சார்! கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்! டிடிஎப் வாசனை அக்டோபர் 3 வரை சிறையில் அடைக்க உத்தரவு அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் வாசன் வீலிங் செய்த போது அவ்வழியாக நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை வாசனின் விபத்து அவர்களது வாகனத்திலும் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு உயிர் சேதத்தையோ காயங்களையோ ஏற்படுத்தியிருந்தால் என்ன செய்வது என பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதுவும் வாசன் ஜாமீனில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.


இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தமிழக காவல் துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர். அவரை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, டிடிஎப் வாசன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


அதாவது, அனுமதியின்றி வெளிநாட்டு ஹெல்மெட்டை பயன்படுத்தியதாக டிடிஎப் வாசன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். டிடிஎப் வாசன் பயன்படுத்திய ஹெல்மெட் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் அவரது நண்பர் அஜீஸ், இந்த ஹெல்மெட்டை சட்ட விரோதமாக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


ஐ.எஸ்.ஐ தரச்சான்று இல்லாத 1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை டிடிஎப் வாசன் பயன்படுத்தியதாகவும், இந்த வெளிநாட்டு ஹெல்மெட்டை பயன்படுத்த இந்தியாவில் அனுமதி இல்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்த ஹெல்மெட்டை எப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்தனர் என்பது குறித்தும் காஞ்சிபுரம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது குறித்து டிடிஎப் வாசனிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Post