சென்னை: 2025ம் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில்.. ரிஷப ராசி நேயர்களுக்கு வாழ்க்கை அடுத்த 1 வருடம் எப்படி இருக்கும்? உங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
1 வருடத்தில் ஒருவருக்கு என்னவேண்டுமானாலும் நடக்கும். அதிலும் அடுத்த வருடம் நிறைய பெயர்ச்சியில், திசை மாற்றங்கள் நடக்க உள்ளன. குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். அந்த வகையில் ரிஷப ராசி நேயர்களுக்கு அடுத்த 1 வருடத்தில் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம் .
ஏற்றம் ஏற்படும் விஷயங்கள்:
1. வெளிநாடு செல்லலாம்: உங்களுக்கு அடுத்த 1 வருடம் உலகம் சுற்றும் வாலிபன் கதைதான். ஆம் உலகம் சுற்றும் வாலிபன் கதையாக நீங்கள் பல நாடுகளுக்கு செல்வீர்கள். உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
2. வழக்கு பிரச்சனை தீரும்: உங்களுக்கு விவாகரத்து, சொத்து , கிரைம் குற்றம் என்று பல விஷயங்களில் வழக்குகள் நடந்து இருக்கலாம். அந்த வகையில் பெரிய வழக்குகள் எல்லாம் 2025ல் நிறைவு பெறும். முக்கியமாக நிதி தொடர்பான வழக்குகள் சரியாகும்.
3. ப்ரோமோஷன் கிடைக்கும்: உங்களுக்கு வேலையில் ப்ரோமோஷன் கிடைக்கும். முக்கியமாக நீண்ட காலமாக வேலை பார்த்தவர்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். எனக்கு பணியில் முன்னேற்றம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்.
4. நோய்கள் குணமாகும்: இத்தனை காலம் சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று இருப்பீர்கள். சிலர் நீண்ட காலமாக உடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். அவர்களுக்கு எல்லாம் நோய்கள் குணமாகும். நாள்பட்ட வியாதிகள் கூட குணமாகும்.
சறுக்கல் ஏற்படும் விஷயங்கள்:
1. பணத்தில் பிரச்சனை: சிலருக்கு பணத்தில் பிரச்சனை வேண்டும். முக்கியமாக பொருளாதார ரீதியாக சிக்கலில் மாட்டுவீர்கள். கடனில் சிக்குவீர்கள். கவனம்.
2. காதலில் பிரச்சனை: காதலில் கவனமாக இருக்கவும். பெண் - ஆணை தேர்வு செய்யும் முன் கவனமாக இருக்கவும்.
3. ஏமாற்றம் நிகழும்: ஏதாவது ஒருவரிடம்.. ஒரு விஷயத்தில் ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கலாம் ., மோசடி நபர்களிடம் கவனமாக இருக்கவும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1. முதலீட்டில் கவனம் தேவை: முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். தினசரி முதலீடு மார்கெட்களை தவிர்க்கவும்.
2. ரிஸ்க் வேண்டாம்: எதிலும் ரிஸ்க் வேண்டாம். மலை ஏறுதல்.. கடலில் சாகசம் செய்தல் போன்ற ரிஸ்க் வேண்டாம்.
3. வாயை அளந்து பேசுங்கள்: யாரிடமும் கோபம் அடைய வேண்டாம். பேசும் முன் யோசித்து பேசுங்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage