38 பயணிகளை கொன்ற அஜர்பைஜான் விமான விபத்து.. ரஷ்யாவின் சதி காரணமா? ஷாக் தகவல்!

post-img
மாஸ்கோ: அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமான் 62 பேருடன் விபத்தில் சிக்கிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அம்சம்தான் காரணம் என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருக்கிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான 'எம்ப்ரேயர் 190' என்கிற விமானம், 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன், பாகுவிலிருந்து ரஷ்யாவில் உள்ள க்ரோஸ்னிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. எல்லாம் சரியாகத்தான் இருந்ததாக விமானி நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் விமானம் காஸ்பியன் கடல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. எவ்வளவோ முயன்று பார்த்தும் விமானத்தை விமானியால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே அக்டோவில் விமானத்தை தரையிறக்க முயன்றிருக்கிறார். ஆனால் சுமார் 3 கி.மீக்கு முன்னதாகவே விமானம் கட்டுப்பாட்டை மீறி தரையிறங்கியிருக்கிறது. அப்போது விபத்தில் சிக்கியிருக்கிறது. இது தொடர்பான வீடியாவில், விமானம் தரையிறங்கும்போது தீப்பற்றிக்கொண்டு எரிந்திருப்பது தெளிவாக தெரிந்திருக்கிறது. ஆனால் உடைந்த விமானத்தின் பாகங்களில் வழக்கத்திற்கு மாறான சிலவற்றை விசாரணை அதிகாரிகள் பார்த்திருக்கின்றனர். 38 பேர் உயிர்களை பலி கொண்ட விபத்து குறித்து அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சில விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. அதாவது, பிரிட்டனை சேர்ந்த Osprey Flight Solutions எனும் தனியனார் விமான பாதுகாப்பு அமைப்பு, 'எம்ப்ரேயர் 190' விமானத்தின் வால் பகுதியில் சில ஓட்டைகளை சுட்டிக்காட்டியுள்ளது. விபத்தில் சிக்கும் விமானங்களில் இப்படியான ஓட்டைகள் இருக்காது. அப்படியெனில் இது விபத்து அல்ல, மாறாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு நடத்திய தாக்குதல் என்று விசாரணை அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த தகவலைதான் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கிறது. தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள வான் பாதுகாப்பு சூழல், பயணிகள் விமானம் எது? எதிரிகளின் போர் விமானம் எது என்பதை கூட பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்கிறது. இந்த வான் பாதுகாப்பு அமைப்புதான் 'எம்ப்ரேயர் 190' விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறது என்று தனியனார் விசாரணை அமைப்பு கூறியிருக்கிறது. ஆனால் இதனை ரஷ்யா கடுமையாக மறுத்திருக்கிறது. விமானத்தின் மீது பறவை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. பறவைகள் மூலம் ஏற்படும் விபத்தில் சிக்கும் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது, விமான விபத்தை ஆய்வு செய்பவர்களுக்கு தெரியும். எனவே விபத்து குறித்து விரைவில் தெரியவரும் என்று பலரும் கூறியுள்ளனர். எது எப்படி இருப்பினும் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post