டெல்லி: இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் நம் நாட்டில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2050ம் ஆண்டில் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், ஜெயின், சீக்கியம் உள்ளிட்டவற்றை கூறலாம். இதுதவிர இன்னும் பல மதங்கள் உள்ளன. இதில் உலகில் அதிக மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதற்கு அடுத்து 2வதாக இஸ்லாம் மதத்தை மக்கள் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் தான் 2050ம் ஆண்டில் எந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகம் இருப்பார்கள்? என்பது பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த Pew Research Center என்பது அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஒரு லாப நோக்கமற்ற ஒரு ஆராய்ச்சி அமைப்பாகும். உலக நாடுகளில் நிலவும் சமூக பிரச்சனைகள், பொதுமக்களின் கருத்துகள், மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
Pew Research Centre சார்பில் ‛மக்கள்தொகை கணிப்பு 2010-2025 எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அதில் தான் தற்போது அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் இந்தோனேசியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா தான் முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு நாட்டில் இருக்கும் மக்கள்தொகை மற்றும் அவர்களின் குழந்தை பெற்று கொள்ளும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த மக்களின் வயது மற்றும் குழந்தை பிறப்பு சதவீதம் தான் காரணமாகும். அதாவது தற்போது இஸ்லாமிய மக்கள்தொகை அடிப்படையில் அவர்களின் சராசரி வயது என்பது 22 ஆக உள்ளது. இது இந்துக்களுக்கு 26 வயது என்றும் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 28 வயது என்றும்உள்ளது
இந்தியாவை பொறுத்தவரை முஸ்லிம் பெண்களில் குழந்தை பெற்றெடுப்பதன் சராசரி 3.2 என்ற அளவிலும், இந்து பெண்களிடம் 2.5 என்ற அளவிலும், கிறிஸ்தவர்களிடம் 2.3 சதவீதம் என்றும் உள்ளது. குழந்தை பெற்றெடுக்கும் சதவீதம் அதிகம் உள்ளதால் இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2010ம் ஆண்டு நிலவரப்படி இந்திய மக்கள்தொகையில் 14.4 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இது 2050ம் ஆண்டு 18.4 சதவீதமாக மாறும். இதன்மூலம் இஸ்லாமிய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் அதிக இஸ்லாமியர்கள் வசிப்பார்கள். அதாவது தற்போது இந்தோனேசியாவில் தான் அதிக இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால் 2050ம் ஆண்டில் இந்தோனேசியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் 2050ம் ஆண்டில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை என்பது 311 மில்லியன் (31.1 கோடி) ஆக மாறும். அதேபோல் பாகிஸ்தான் 2வது இடத்தை பிடிக்கும். அந்த நாட்டு மக்களின் முஸ்லிம் மக்கள் தொகை என்பது 273 மில்லியன் (27.3)தவீதமாக இருக்கும். அதன்பிறகு இந்தோனேசியா 3வது இடத்தில் இருக்கும். அங்கு முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 257 மில்லியன் (25.7 கோடி) ஆக இருக்கும். தற்போது இஸ்லாமிய மக்கள்தொகையில் இந்தோனேசியா தான் முதலிடத்தில் உள்ள நிலையில் வரும் 2050ம் ஆண்டில் அந்த நாட்டை பாகிஸ்தான், இந்தியா முந்தி முதல் 2 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஒரேயொரு கண்டிஷனால் அலறிய ஜி ஜின்பிங்! எதிரியாகும் நண்பர்கள்?
மேலும் 2050ம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதத்தில் இந்து மதம் 3ம் இடத்தை பிடிக்கும். கிறிஸ்தவம், முஸ்லிமுக்கு அடுத்தப்படியாக இந்து மதம் இருக்கும். அதாவது 1.03 பில்லியன் மக்கள் இந்து மதத்தை கடைப்பிடிப்பார்கள். அதேபோல் 2010ம் ஆண்டில் உலகளவில் 1.6 பில்லியன் (160 கோடி மக்கள்) பேர் இஸ்லாமியர்களாக இருந்தனர். இது உலுக மக்கள்தொகையில் 23 சதவீதமாக இருந்தது. ஆனால் 2050ம் ஆண்டில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை என்பது 73 சதவீதம் வரை அதிகரிக்கும். அதாவது 2050ம் ஆண்டில் உலகளவில் இருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை என்பது 2.8 பில்லியன் (280 கோடி) ஆக மாறும்.
அதேபோல் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியாக ஆசிய பசிபிக் பிராந்தியம் இருக்கும். இந்த பிராந்தியத்தில் உள்ள இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மட்டும் உலகளவில் உள்ள இஸ்லாமியர்களில் 72 சதவீதம் பேர் இருப்பார்கள் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.