பாகிஸ்தானில் உயிரிழப்பு.. மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிக்கு நேர்ந்த கதி

post-img
இஸ்லாமாபாத்: மும்பை 26/11 தாக்குதலில் மூளையாக செயல்பட்டு 166 பேரின் உயிரை கொன்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பில் செயல்பட்டு வந்த பயங்கரவாதி அப்துல் ரஹீம் மக்கி மாரடைப்பால் பாகிஸ்தானில் இறந்தான். மும்பையில் கடந்த 2008 நவம்பர் மாதம் 26ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. படகில் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். மும்பையின் அடையாளாக இருக்கும் தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம், நாரிமண் ஹவுசில் உள்ள யூத மையம் மற்றும் லியோபோல்ட் கஃபே ஆகியவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் 166 பேர் பலியாகினர். மேலும் 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் ஆறாத வடுவாக உள்ளது. இந்த தாக்குதல் என்பது மும்பை 22/11 தீவிரவாத தாக்குதல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடந்த பிறகு நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் மொத்தம் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அமீர் அஜ்மல் கசாப் என்பவர் உயிருடன் பிடிபட்டான். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர வைத்தது. இந்நிலையில் தான் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் வசித்து வந்தான். இவன் தற்போது ஜேயூடி எனும் ஜாமாத் உத் தவா அமைப்பின் தலைவராக இருந்தான். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்தது. இதையடுத்து உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தான் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தான். தற்போது இறந்த அப்துல் ரஹ்மான் மக்கிக்கு மும்பை பயங்கரவாத தாக்குதல் மட்டுமின்றி இன்னும் சில தாக்குதல்களிலும் தொடர்பு உள்ளது. அதன்படி கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல், 2008 ஜனவரி 1ம் தேதி ராம்பூர் சிஆர்பிஎப் முகாம் மீதான தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2018 ல் காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜதாத் புகாரி மற்றும் 2 பாதுகாவலர்களை கொன்ற வழக்கிலும் தொடர்பு உள்ளது. முதலில் லஷ்கர் இ தொய்பாவில் செயல்பட்ட இவன் ஜேயூடி அமைப்பின் தலைவராக மாறினான். மேலும் தொடர்ந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்ததால் அப்துல் ரஹ்மான் மக்கி என்பவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவன். இவன் முதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பை சேர்ந்தவரும், மும்பை தாக்குதலுக்கு காரணமானவருமான ஹபீத் சையத்தின் மைத்துனன் தான் இந்த அப்துல் ரஹ்மான் மக்கி. இவரும் மும்பை பயங்கரவாதத்துக்கு மூளையாக செயல்பட்டதோடு, நிதியுதவி செய்தான். கடந்த 2019 ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அப்துல் ரஹ்மான் மக்கியை கைது செய்தது. லாகூரில் வீட்டு காவலில் அவர் வைக்கப்பட்டான். 2020ம் ஆண்டில் பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த புகாரில் அவருக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில் தான் தற்போது அப்துல் ரஹ்மான் மக்கி மாரடைப்பால் இறந்துள்ளான். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post