சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் தனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது பற்றிய உண்மையை ஐஸ்வர்யா போட்டு உடைத்திருக்கிறார்.
அதைக்கேட்டு மொத்த குடும்பமும் ஆடிப் போய் இருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல மாதங்களாகவே எல்லோரும் எதிர்பார்த்து இருந்தது இன்று எதிர்பாராமல் நடந்திருக்கிறது. தனத்திற்கு கர்ப்பமாக இருக்கும் போதே மார்பக புற்றுநோய் பாதித்திருப்பது தெரிய வந்த நிலையில், அது குறித்த போதிய விழிப்புணர்வு காட்டாமல் தனக்கு தெரிந்த உண்மையை வெளியே சொல்லாமல் தனம் மறைத்து வைத்திருந்தார்.
ஆனால் ஹாஸ்பிடலில் வைத்து மீனாக்கு இந்த உண்மை தெரிய வர, மீனாவை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று தனம் சத்தியம் வாங்கி விட்டு எனக்கு ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நடக்க வேண்டும் புது வீடு கட்டி எல்லோரும் ஒன்றாக அங்கு வாழ வேண்டும் என்று அடுக்கடுக்கான தன்னுடைய ஆசைகளை பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்.
தற்போது அதுவெல்லாம் ஒவ்வொன்றாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆப்ரேஷன் செய்வதற்காக பணத்திற்கு என்ன செய்யலாம் என்று முல்லை மற்றும் மீனா தவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது நான் மொத்த பணத்திற்கும் ரெடி செய்து விடுகிறேன் என்று கதிர் கூறி இருக்கும் நிலையில் தற்போது இந்த உண்மை எப்போது தான் தெரியவரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர்.
யாரு சாமி நீங்க.. பாண்டியன் ஸ்டோரின் அந்த வீடியோ பாத்தீங்களா? டக்கென்று நினைவு வந்திருக்குமே
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் அந்த மொத்த உண்மைகளும் வெளியே தெரிந்திருக்கிறது. அதில் ஐஸ்வர்யா மீண்டும் தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது, "கேன்சர் எவ்வளவு கொடுமை தெரியுமா? அது வர்றவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு தெரியுமா? அந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க எங்க வீட்டிலேயும் ஒருத்தங்க இருக்காங்க பிரண்ட்ஸ்" என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்ததும் மொத்த குடும்பமும் வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கின்றனர். அதில் இப்படி ஒரு வீடியோ போட்டு இருக்கியே இந்த வீட்டில யாருக்கு அந்த நோய் இருக்கு சொல்லு? என்று மூர்த்தி அதட்டி கேட்க, அப்போது மருத்துவமனைக்கு போயிருந்த தனம் மீனா முல்லை மூவரும் வீட்டிற்கு வர மீனாவின் அப்பாவும் அம்மாவும் மீனாவிடம் ஓடிப்போய் மீனா உனக்கு ஒன்னும் இல்லம்மா என்று கேட்கின்றனர்.
அதைத்தொடர்ந்து தனத்தின் அண்ணனும் அண்ணியும் தனத்திடம் தனம் உனக்கு ஒன்னும் இல்லலாமா என்று கேட்க, அதை தொடர்ந்து முல்லையிடம் அவருடைய அப்பா அம்மாடி உள்ள உனக்கு ஒன்னும் இல்லயே என்று கேட்க, அவர் எனக்கு ஒன்னும் இல்லப்பா நான் நல்லா இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவை ஏண்டி இப்படி ஒரு பொய்யான வீடியோவை போட்டு இருக்கா, என்ன பொழப்புடி என்று திட்டுகிறார்.
அதற்கு ஐஸ்வர்யா நான் வீடியோவில் சொன்னது எல்லாமே உண்மைதான் என்று கத்த மூர்த்தி தனத்திடம் தனம் நம்ம வீட்டில யாருக்கு என்ன தனம் என்று கேட்க, அதற்கு தனம் பேசாமல் நிற்கிறார். அப்போது ஐஸ்வர்யா நீங்க என்ன கேட்டாலும் அக்கா சொல்ல மாட்டாங்க, ஏன்னா அக்காவுக்கு தான் கேன்சர் இருக்கு என்று சொல்ல மூர்த்தி அதிர்ச்சியாகி நிற்கிறார்.
இப்படியாக பிரமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இப்பவே இதற்கு சுபம் போட்டுருங்க என்று கருத்து தெரிவிக்க, இன்னும் ஒரு சில ரசிகர்கள் ஐஸ்வர்யா செய்ததிலே உருப்படியான செயல் என்றால் இதுதான் என்று கூறி வருகிறார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage