திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், அந்த பெண் கள்ளக்காதலர்கள் இரண்டு பேரால் தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு பலாத்காரம் செய்யபட்டதால் தான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ளக்காதலர்கள் இரண்டு பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் பொன்னன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி கனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்ணன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் கனி மட்டுமே தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி கணவர் கண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் கனி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அவர் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கனிக்கு இரண்டு கள்ளக்காதலர்கள் இருந்தனர் என்றும், சம்பவம் நடந்த நாளில், கள்ளக்காதலர்கள் இருவரும் மாறி மாறி உல்லாசம் அனுபவித்ததாலும், கனி மயக்க நிலையில் இருந்தபோதும் காட்டு மிராண்டி தனமாக அவர்கள் நடந்துகொண்டதாலும் தான் உயிரிழந்தார் என்று தெரியவந்தது.
இதையடுத்து கள்ளக்காதலர்கள் செல்வம் மற்றும் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:- கண்ணன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருவதால், கனி மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளாராம். அப்போது அவருக்கு ராஜா என்பவரின் அறிமுகம் கிடைத்ததாம். இருவரும் பேசி பழகி வந்ததாகவும், இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து ராஜா அடிக்கடி கனி வீட்டுக்கு வந்து செல்வதாகவும், இப்படியாக இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜாவுக்கு திடீரென சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. இதனால் கடந்த 7 மாதத்துக்கு முன்பாக சிங்கப்பூர் சென்றுவிட்டாராம். கணவர் கண்ணன் மாதம் ஒரு முறை தான் வீட்டுக்கு வருவதாலும், கள்ளக்காதலர் ராஜா வெளிநாடு சென்றதாலும் கனி மீண்டும் தனியாகவே இருந்துள்ளார்.
இதற்கிடையே தான் செல்வம் என்பவரின் அறிமுகம் கனிக்கு கிடைத்துள்ளதாம். தொடர்ந்து இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின்னர் செல்வத்துடனும் கனிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாடு சென்றிருந்த ராஜா ஒரு நாள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு செல்வம் என்பவரும் வீட்டுக்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது.
இதனால் கோபம் அடைந்த ராஜா கனியை திட்டிவிட்டு அடித்து கொடுமைப்படுத்தி உடலுறவுக்கொண்டுள்ளார். பின்னர் வெளியே சென்றுவிட்டார். இதற்கிடையே இரண்டாவது கள்ளக்காதலரும் வீட்டுக்கு வந்து கனியிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். அவர் மயக்க நிலையில் இருந்த போதும் வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால்தான் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.