திண்டுக்கல் அருகே ஆவணி முதல் செவ்வாயை முன்னிட்டு பாதாள செம்பு முருகன் கோயிலில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானை வழிபடக்கூடிய முக்கிய நாட்களில் செவ்வாய்க்கிழமை ஒன்றாகும் இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து சுவாமியை வழிபடுவது சிறப்பாகும். குறிப்பாக ஆவனி மாத சஷ்டி விரதம் தொடங்கி, தை மாத கிருத்திகை வரை மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து சுவாமியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கப்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் முருகன் செங்கோலுடன் , பாண்டிய மன்னனின் இராஜ தலைப்பாகை மணி மகுடம் , வெண் முத்துகள் , பட்டை தீட்டிய வெளிர் கற்கள் , மரகத பச்சை நிறக்கற்கள் பதித்த செவ்வாயின் ஆதிக்க வண்ணமான பச்சை வண்ண மஹா ராஜ அலங்காரத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.