" இனி தங்கம் விலை குறையாது.. அதிகரிக்கவே செய்யும்! சொல்லும் ஆனந்த் சீனிவாசன்

post-img

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் என மாறி மாறி பயணித்து வரும் நிலையில் வரும் நாட்களில் தங்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளது.

நமது நாட்டில் சேமிப்பு குறித்து பொருளாதாரம் குறித்தும் பெரியளவில் அனைவருக்கும் விழிப்புணர்வு இருப்பதில்லை. பட்ஜெட் சமயத்தில் மட்டமே பொருளாதாரம் குறித்து ஓரிரு தகவல்களை நாம் தெரிந்து கொள்கிறோம்.

அதன் பிறகு பெரும்பாலான நாட்கள் இதில் இருந்து நாம் தள்ளியே இருக்கிறோம். அப்படி பொருளாதாரம், சேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்போரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன்.

தங்கம்:

பல சிக்கலான விஷயங்களையும் மிக எளிதாக அனைவருக்கும் புரியும்படி சொல்வது தான் இவரது சிறப்பு.. இவர் சொல்வது சில நேரங்களில் நமக்கு என்னடா இப்படியெல்லாம் சொல்கிறாரே என்பது போலத் தோன்றினாலும், அதன் பிறகு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் இவர் சொல்வது சரியாகவே இருக்கும். வரதை தாண்டி செலவு செய்யக் கூடாது.. தேவையற்ற செலவுகள் கூடாது வருமானத்தில் ஒரு பகுதியைச் சேர்த்து வைக்க வேண்டும் என இவர் சொல்வது ரொம்பவி சிம்பிள் தான்.

முதலீடு என்று வரும் போது இவர் எப்போதும் சொல்வது தங்கத்தைத் தான். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை அதிகம் வாங்க வேண்டும் என்றும் தங்கத்தைப் போன்ற முதலீடுகள் வேறு எங்கும் இருக்காது என்பதையே இவர் தொடர்ந்து சொல்லி வருகிறது. தங்கம் விலை இப்போது ஏற்றம், இறக்கம் என மாறி மாறி இருக்கும் நிலையில், தங்கத்தை இப்போது வாங்குவது சிறந்ததா.. வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.

குறையாது:

இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோக்களில் கூறுகையில், "தங்கத்தின் விலை 5500 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இதுதான் குறைந்தபட்ச விலை என்று நினைக்கிறேன். இதற்குக் கீழ் செல்லாது. அடுத்து செப். மாதம் அமெரிக்க மத்திய வங்கி கூட இருக்கிறது. அதுவரை பெரியளவில் மாற்றம் இருக்காது. அதேநேரம் அடுத்தாண்டு தங்கம் மிகப் பெரியளவில் உயரத் தொடங்கும் ஐஐஎம் அகமதாபாத் இது குறித்து சர்வே ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதில் கொரோனா பாதிப்பு காலத்திலும், பண மதிப்பு நீக்கக் காலத்திலும் தங்கத்தை மக்கள் அதிகம் வாங்கியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் தங்கத்தைத் தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதாவது இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தைத் தான் கஷ்ட காலத்தில் முக்கியமாகப் பயன்படுத்துகிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் சேமிப்பில் 11% தங்கத்தில் வைத்துள்ளனர்.

எங்கெல்லாம் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறதோ.. அங்கெல்லாம் மட்டும் தங்கத்தில் மக்கள் சேமிப்பது சற்று குறைந்துள்ளது. இருப்பினும், தங்கம் உதவுவது போல எதுவும் உதவாது. எப்போது வேண்டுமானாலும் தங்கத்தைக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரைக் குறைந்தது ஒரு குடும்பம் 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும்.

குறைய வாய்ப்பில்லை: தங்கம் விலை இனிமேல் குறைய வாய்ப்பில்லை. அடுத்து முகூர்த்த சீசனும் வருகிறது. தங்கத்தை வாங்குவது வரும் காலத்தில் அதிகரிக்கும். எனவே, தங்கம் விலை இனிமேல் குறையாது. ஏழை மற்றும் சிறந்த ஒரு முதலீடாகவே பார்த்து வருகின்றனர். அவர்கள் இதை ஆபரணங்களா பார்ப்பதில்லை. கொரோனா போன்ற பிரச்சினை வரும்போது உடனடியாக அதைக் காசாக மாற்ற முடியும் என்பதால் அதை மக்கள் விரும்புகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

இனி அதிகரிக்கும்: முன்பு ஒரு வீடியோவில் அமெரிக்க மத்திய வங்கி விகிதம் உயர்த்தி பிறகும் தங்கம் விலை விலை பெரியளவில் விழவில்லை என்றால், இனி தங்கத்தின் விலை குறையாது என்றே அர்த்தம் என்று அவர் குறிப்பிட்டார் அதேபோல அமெரிக்க மத்திய வங்கி 0.25% வட்டியை உயர்த்திய நிலையில், தங்கம் பெரியளவில் அதிகரிக்கவில்லை. முகூர்த்த சீசனும் வந்துவிட்ட நிலையில், வரும் காலத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்றே தெரிகிறது.

Related Post