வாஷிங்டன்: கேட்ஜெட் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய apple wonderlust நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய சிறப்புகளை பார்க்கலாம்.
ஸ்மார்ட் போன்கள் , ஸ்மார்ட் வாட்ச்கள் உள்பட டெக் உலகில் ஆப்பிள் நிறுவனம் அசைக்க முடியாத இடத்தில் கோலோச்சி வருகிறது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் புதிய மாடல்கள் மற்றும் பிற புதிய கேட்ஜெட்களை அறிமுகப்படுத்தும் விழாவை நடத்தும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 12) நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி 10.30 மணியளவில் ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப்பில் இது நேரடியாக ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் கேட்ஜெட் விரும்பிகள் ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்போகும் புதிய அப்டேட் எனனவாக இருக்கும் என்று வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சரியாக நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரிஸ் குறித்த அப்டேட் வெளியானது. புதிய ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரிஸ் புதிய S9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 18 மணி நேரம் பேட்டரி லைப் கொண்டது ஆகும். அதேபோல் புதிய சிப் மூலம் ஹெல்த்டிராக்கிங் சிஸ்டமும் மேம்பட்டதாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதிய் U2 chip மூலம் பைண்ட் மை ஃபீட்சர் வசதி மற்றும் கனெக்ட்விட்டி மேம்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வரலாற்றில் முதல்முறை.. இன்று வெளியாகும் ஐபோன் 15இல் வரும் மெகா மாற்றம்? செம ஹேப்பி
அதேபோல, டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத நிறுவனம் என்ற இலக்கை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி மறுசுழற்சி செய்யப்பட்ட பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிள் 9 சீரிஸ் விலை 399 டாலரில் இருந்து 499 டாலர் விலை வரை என தொடங்குகிறது. S9 chip, 2000nits பிரைட்னஸ், அட்வான்ஸ்டு சைக்கிளிங் டிராக்கிங் என பல்வேறு வசதிகள் உள்ள
ஆப்பில் வாட்ச் அல்ட்ரா 2 மாடலை பொறுத்தவரை ஆப்பிள் இதுவரை உருவாக்கியதில் அதிக பிரைட்னஸ் கொண்டதாக டிஸ்பிளே உள்ளது. முக்கியமான அம்சங்களாக பார்த்தால், பாஸ்ட் சார்ஜிங், 3000 nits பிரைட்னஸ், பிளாஷ் லைட் பூஸ்ட், நியூ கெஸ்டர்ஸ், ஆக்ஷன் பட்டன் ஆகியவை கொண்டுள்ளது. இதன் விலை 799 டாலராக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 67 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு வரும். புதிய ஆப்பிள் வாட்ச் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. வரும் 22 ஆம் தேதி முதைல் விற்பனை துவங்குகிறது.