பட்டா மாறுதலுக்கு கட்டணம் எவ்வளவு? ஆன்லைனில் பட்டாவை பெறுவது எப்படி? சிட்டாவில் பெயர் மாற்ற முடியுமா

post-img
சென்னை: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்த பட்டாவை ஆன்லைனில் எளிதாக எப்படி பெறுவது? இதற்கான கட்டணம் எவ்வளவு? பட்டா சிட்டாவில் பெயர்களை ஆன்லைனில் மாற்றலாமா? அல்லது வேறு வழிகள் என்னென்ன? என்பதையெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம். பழைய பட்டா காரணமாகவே சிக்கல்கள் நிறைய எழுவதால், எப்போதுமே வீடு அல்லது நிலம் வாங்கும்போது, அதற்குரிய பத்திரம் பதிந்ததுமே, உடனே பட்டாவும் சேர்த்து வாங்கிவிட வேண்டும் முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாட்சியர் அலுவகத்திற்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும். ஆனால், இப்போது ஆன்லைனிலேயே பட்டா வாங்க முடியும்... ஆன்லைன் வசதி: இதற்காகவே, தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும்போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இடம் அல்லது வீடு வாங்குவோரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா என்பதை அறிந்து, அதனையும் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். இதற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுதான் தமிழ் நிலம் என்ற பிரத்யேகமான வெப்சைட்.. இந்த வெப்சைட்டில் எப்படி பட்டா பெயர் மாற்றம் செய்யலாம்? தமிழ் நிறம்: https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பெயர், செல்போன் நம்பர், எண் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும். பிறகு மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு தந்து உள்ளே நுழைய வேண்டும். உட்பிரிவு இல்லாத நிலம், உட்பிரிவு உள்ள நிலம் ஆகிய லிங்கில் ஒன்றை தேர்வு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப்பத்திரம், பரிவர்த்தனை பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இதற்கு தேவைப்படும். விண்ணப்பதாரர்கள்: அதேபோல, விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தரவேண்டும்.. டாக்குமெண்ட் வடிவில் இவைகளை எல்லாம் அப்லோட் செய்ய வேண்டும். இவைகளை வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். பத்திரப்பதிவு செய்ய உட்பிரிவுக்கு ரூ. 600 கட்டணம் செலுத்த வேண்டும். உட்பிரிவு இல்லையென்றால் ரூ. 60 கட்டணமாகும்.. இந்த கட்டணம் செலுத்தியதுமே, விண்ணப்பதாரரின் செல்போனுக்கு பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண்ணுடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும், அதற்கான சேவைக்கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை, பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உங்கள் போனுக்கு மெசேஜ் வரும். அடுத்த 1 வாரத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும்... இதனை ஆன்லைனில் டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம். விஏஓ அலுவலகம்: இதேபோல, இசேவை மையத்திலும் அப்ளே செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான சான்றுகள் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட நகல்களுடன் விஏஓ அலுவலகத்தை அணுக வேண்டும். கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம் பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்தனை பத்திரம் அக்குவிடுதலைப் பத்திரம் ஆகிய 6 பத்திரங்களில் உங்கள் பத்திரம் எதுவோ அந்த பத்திரம், வில்லங்க சான்றிதழ், ஏற்கனவே பட்டா யார் பெயரில் உள்ளதோ அந்த பத்திரம் (லேட்டஸ்ட் பட்டா), உங்கள் ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ்,, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் (இறந்துவிட்டால் மட்டும்) ஆகியவற்றுடன் சென்றால், இசேவை மையத்திலேயே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதற்கு கட்டணம் கட்ட வேண்டும். சர்வே எண்: இதுபோலவே, ஒரு இடத்தை விற்கும்போதும், வாங்கும்போதும் பட்டா யார் பெயரில் இருக்கிறதை என்பதை அறியலாம். பட்டாவில் நிலத்தின் சொந்தக்காரர் யார்? நிலத்தின் சர்வே எண்? நிலம் எந்த வகையை சேர்ந்தது? எந்த பகுதியில் அமைந்துள்ளது? போன்ற விவரங்களுடன் இந்த ஆவணம் தரப்படூம் பட்டா சிட்டாவில் பெயர்களை நீங்கள் மாற்றலாம். ஆனால், இதனை நீங்கள் ஆன்லைனில் செய்ய முடியாது. உங்கள் பகுதியிலுள்ள தாலுகா அல்லது விஏஓ அலுவலகத்திற்கு சென்று பட்டா பரிமாற்ற படிவத்தை வாங்கி, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பிறகு 30 முதல 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்கள் உங்களுக்கு வழங்கப்படும். அதேபோல, ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டா, சிட்டா, பட்டா நகல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டு, அது அமலிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post