ஊட்டி: ஒருபக்கம் கடுமையான குளிர், மறுபக்கம் கடுமையான உறைபனி என நீலகிரி நடுங்கி கொண்டிருக்கிறது.. உறைபனியால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பெருத்த கவலையில் காணப்படுகிறார்கள்.
நீலகிரியில் வருடந்தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்ப்பனி விழும்... அதாவது. நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழுவது வாடிக்கையாகும்.
கடுமையான குளிர்: ஆனால் இந்த முறை. கடந்த ஜூன் மாதம் முதலே மழை கொட்ட துவங்கிவிட்டது.. கடந்த வாரம் வரைகூட, மிதமான மழை ஊட்டியில் காணப்பட்டது. இதனால் பனியின் தாக்கம் மிகவும் குறைந்ததுடன், நீர்பனி விழுவதும் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீலகிரியில் நீர்பனி கொட்டி தொடங்கியது. இந்த ஒருவார காலமாக நீர்பனி கொட்டி வருகிறது.
இதனால், கடந்த 2 தினங்களாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைபனியை காண முடிகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை, 5 டிகிரி செல்ஷியசாக இருந்து வந்தநிலையில், நேற்று காலை, நகரின் பல பகுதிகளில், குறிப்பாக புறநகர் பகுதிகளான காந்தள், தலைக்குந்தா, எச்.பி.எப்., சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதி புல்வெளிகளில் உறைப்பனி படர்ந்து காணப்பட்டது.
அதிக குளிர்: இதனால், ஊட்டியில் நேற்றைய தினம் அதிகபட்சம், 17 டிகிரி; நகர பகுதியில், குறைந்தபட்சம், 3.2 டிகிரி; புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானுது.. பனி தாக்கத்தால் காலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவியது. இதனால் விடிகாலையில், தேயிலை தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்திருக்கிறது.. எனினம் குளிரை யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.. இந்த குளிரிலும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தவண்ணம் உள்ளனர். குளிரை அனுபவித்தவாறு ஊட்டியை சுற்றி பார்த்து வருகிறார்கள்.
பனிப்படலம்: ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன் மார்கன், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டியது. அங்குள்ள புல் மைதானங்களில் வெள்ளை நிறத்தில் போர்வையை போர்த்தி வைத்ததுபோல பனிப்படர்ந்து காணப்படுகிறது..
செடி, கொடிகளிலும் வெண்மையான உறைபனியை எந்நேரமும் காண முடிகிறது.. சாலைகளின் தார்ரோடுகளிலும் இதே வெள்ளை கலர் பனிக்கட்டிகள் மின்னுகின்றன.. அதேபோல, வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்படும் பைக்குகள், கார்கள் என அனைத்து வாகனங்களிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.. இதனால், ஒவ்வொரு முறையும் வாகனங்களை எடுக்க முயலும்போதெல்லாம் உரிமையாளர்கள் வண்டியின் ஆந்த உறைபனியை அகற்றி, சுத்தம் செய்தே இயக்க வேண்டியிருக்கிறது.
குளிர்காய்கின்றனர்: உறைபனி ஒருபக்கம், கடுமையான குளிர் மறுபக்கம் என நீலகிரியே நடுநடுங்கி கிடக்கிறது.. இதனால், இந்த குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகள் முன்பும், வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள்.. எப்படியும் இந்த குளிர் வரும் ஜனவரி இறுதி வரைநீடிக்கும் என தெரிகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.