சென்னை: தமிழக அரசின் புதுமை பெண் திட்டம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. சில விமர்சகர்கள் ₹1,000 போதுமானதாக இல்லை என்று வாதிட்டாலும், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் தொடர்கிறது. எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் தொகை உயர்த்தப்படலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்கு என்று பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இலவச பேருந்து பயண திட்டம், மாதம்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதில் தாலிக்கு தங்கம் திட்டம் நீக்கப்பட்டு புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது. அடிப்படையில் தாலிக்கு தங்கம் திட்டம் கேட்க நன்றாக இருந்தாலும் தங்கம் விலை தொடர் உயர்வால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அதோடு இல்லாமல்.. தாலிக்கு தங்கம் திட்டம் மறைமுகமாக வரதட்சணையை ஆதரிப்பது போல ஆகிவிடும்.
மறைமுகமாக வரதட்சணை முறையை ஆதரிக்கும் விதமாக இது இருப்பதால் பெண்களுக்கு நேரடியாக பயன் சென்று சேரும் வகையில் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது. நேரடியாக வங்கி கணக்கில் ; இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவிகள் பள்ளி படிப்பை இடைநிற்காமல் தொடருவார்கள். கல்லூரிக்கும் செல்வார்கள். அதேபோல் அரசு பள்ளிகளில் படிப்பார்கள்.
ஒரே கல்லில் பல மாற்றங்களை, முன்னேற்றங்களை கொண்டு வரும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அரசு வெளியிட்ட அறிவிப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக அரசின் புதுமை பெண் திட்டம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்து, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000யை இந்த திட்டம் வழங்குகிறது. இளவயது திருமணத்தை குறைத்து, உயர்கல்வி சேர்க்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, உயர்கல்வியில் பெண்களின் பங்கேற்பில் 34% உயர்வுக்கு வழிவகுத்தது.
சேலம், நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க பலன்களைக் கண்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. சில விமர்சகர்கள் ₹1,000 போதுமானதாக இல்லை என்று வாதிட்டாலும், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் தொடர்கிறது.
எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் தொகை உயர்த்தப்படலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களிடம் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. இதே திட்டம் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ் புதல்வன் திட்டம்: அதன்படி தமிழ் புதல்வன் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த வருடம்தான் தொடங்கப்பட்டது . வங்கி கணக்கில் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் தொடங்கப்பட்டது.
அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.