பக்தியும் மார்கழியும் இரண்டற கலந்த ஒன்று. கடவுளுக்கு உகந்த மாதமாகவும் மார்கழி இருக்கிறது. பக்தி கமலும் மார்கழி மாதத்தின் சிறப்புகளை சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
பக்தியின் பரிபூரணம்:
மார்கழி மாதம் என்பது தமிழ் மக்களின் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதம் ஆன்மிகம், பக்தி மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. தனுர் மாதம் என்றும் அழைக்கப்படும் இந்த மாதம், இறைவனை நோக்கி மனதைத் திருப்பி, ஆன்மிக முன்னேற்றம் அடைய உதவும் பல சிறப்புகளை கொண்டுள்ளது. பொதுவாகவே மார்கழி மாதங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் உடனே நிறைவேறி கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி: இந்த நாளில் திருப்பதி மற்றும் பிற வைணவ கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு வணங்குவர். இது ‘சொர்க்க வாசல் திறப்பு’ நாளாகவும் அழைக்கப்படுகிறது.
அருத்ரா தரிசனம்: சிவ பக்தர்களுக்கு மிக முக்கியமான இந்த நாளில், சிவன் நடராஜராக தோன்றி உலக நடனத்தை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. திருப்பதி கோவில்களில், இந்த மாதம் ‘கோயில் பரமாந்ணம்’ பிரசாதம் மிகவும் பிரபலமாகும். “மாதங்களில் நான் மார்கழி” என்று சொன்ன கண்ணனுக்கு உகந்த மாதமாகவும் கொண்டாடப்படுகிறது. மார்கழி என்றாலே அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு பூசணி பூக்களை கோலத்தின் மீது வைப்பது பெண்களின் வழக்கம். மாதம் முழுக்க வாசலில் கோலம் இடுவதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதேபோல திருப்பாவை திருவெம்பாவை பாடி கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க