ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. தமிழ்நாட்டில் மாற்றப்படும் ஆட்டோ கட்டணம்.. முக்கிய முடிவு?

post-img
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஆட்டோ கட்டணம் மறுவரையரை செய்யப்படலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சென்னையில் பைக் டாக்சி ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. ஆனால் மக்களின் கோரிக்கையை அடுத்து பைக் டாக்சி ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பைக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பைக் டாக்சி ஓட்டலாம். ஓட்டுனர் உரிமம், இன்சுரன்ஸ், ஹெல்மெட் போன்ற விதி மீறல் இல்லாமல் பைக் டேக்ஸிகளை இயக்கலாம். அதில் தவறு இல்லை. முறையான விதிகளை பின்பற்றி பைக் டாக்சி ஓட்டலாம் . பைக், டாக்சி கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர் அலுவலர்களை கொண்ட ஒரு குழு அமைத்து உத்திரவிட்டுளோம், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் பலரும் இப்போது பைக் டாக்சியை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில்.. பைக் டாக்சி கட்டணம் குறைவாக உள்ளது. பைக் டாக்சியில் பயணம் செய்வது எளிதாக உள்ளது. கூடுதலாக கட்டணம் கேட்டு யாரும்.. பேரம் பேசுவது இல்லை. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 - 300 ரூபாய் எல்லாம் கேட்பது இல்லை. இதனால் ஆட்டோவில் செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆட்டோவில் செல்பவர்கள்.. கட்டணம் உயர்வு காரணமாக பைக் டாக்சியை விரும்ப தொடங்கி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஓட்டுனர் உரிமம், இன்சுரன்ஸ், ஹெல்மெட் போன்ற விதி மீறல் இல்லாமல் பைக் டேக்ஸிகளை இயக்கலாம். அதில் தவறு இல்லை. முறையான விதிகளை பின்பற்றி பைக் டாக்சி ஓட்டலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம் செய்தனர். சென்னையில் எடுக்கப்பட்ட முடிவால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் போராட்டம் செய்தனர். இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் பயணிகளை கடுமையாக பேசி விமர்சனம் செய்து பேசி இருந்தனர். தன் மனைவியை அடுத்தவனுடன் பைக் டாக்சியில் அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பி போராட்டம் செய்தனர். ஆணும் பெண்ணும் ஒன்றாக பைக்கில் பயணிப்பதை கண்டித்து.. இதெல்லாம் ரொம்ப மோசம்.. எப்படி நீங்கள் இன்னொரு ஆணுடன் பைக்கில் செல்லலாம். இது கலாச்சாரத்திற்கு எதிரானது. குறிப்பாக, கணவன் தன் மனைவியை பைக் டாக்சியில் அனுப்பி வைப்பதை கேள்வி எழுப்பி, இதுபோன்ற செயல்கள் கற்புக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் கேடு... பெண்கள் எப்படி வேறு ஆண்களுடன் பயணம் செய்வது சரி என ஆட்டோ டிரைவர்கள் சிலர் போராட்டத்தில் கூறியுள்ளனர். விரைவில் கட்டணம் மாற்றம்: தமிழ்நாட்டில் விரைவில் ஆட்டோ கட்டணம் மறுவரையரை செய்யப்படலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 20 வருடமாக ஆட்டோ கட்டணம் மறுவரையரை செய்யப்படவே இல்லை. 2013ம் ஆண்டு கடைசியாக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய் என்று அடிப்படை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது ஆட்டோவில் ஏறினாலே 25 ரூபாய் செலுத்த வேண்டும். அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இது போக காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுனர்கள் பின்பற்றுவது இல்லை. கட்டணம் மிக குறைவாக உள்ளது என்று கூறி தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுனர்கள் யாரும் இந்த கட்டணத்தை பின்பற்றுவது இல்லை. இதையடுத்தே தமிழ்நாட்டில் விரைவில் ஆட்டோ கட்டணம் மறுவரையரை செய்யப்படலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்கும் விதமாக கட்டண முறையில் தமிழக அரசு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Post