சென்னை: விசிகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே அவர் இன்று விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அவர் 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார்.
இந்தச் சூழலில் தான் அவர் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக இன்று அறிவித்தார். இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆதவ் அர்ஜுனா விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறிய திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை என்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட அன்று ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கை தலைமைக்கும் கட்சிக்கும் எதிராக இருந்தது என்றும் தெரிவித்தார்.
மேலும், எவ்வளவு ஆற்றல் கொண்ட நபராக இருந்தாலும் கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.