இது காடா? சாஃப்ட்வேர் கம்பெனியா? அம்பானி மகனின் 3 ஏக்கர் சரணாலயம்

post-img
குஜராத்: உலகின் தனியார் அதிநவீன காட்டை உருவாக்கி அதில் 3 ஆயிரம் வனவிலங்குகளைப் பராமரித்து வருகிறார் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியப் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி என்று சொன்ன உடனேயே பலருக்கும் பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற ஆடம்பரமான கல்யாணம்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு உலக அளவில் உள்ள அத்தனை சினிமா நட்சத்திரங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை வந்து குவிந்தார்கள். இந்தளவுக்கு ஒருவரின் திருமணத்திற்குப் பணத்தைச் செலவு செய்ய வேண்டுமா? எனப் பலர் சமூக ஊடகங்களில் விமர்சனம் வைத்தனர். ஆக, பலருக்கும் ஆனந்த் அம்பானியின் ஒரு முகம்தான் தெரியும். ஆனால், அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. ஆனந்த் ஒரு விலnக்குநல ஆர்வலர். அதற்காக அவர் செய்துள்ள சேவையைக் கேட்டால் உங்களில் பலரும் வியந்து போகலாம். அவர் தனது சொந்த செலவில் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை நடத்துகிறார். மறுவாழ்வு மையம் என்றால், ஏதோ குப்பைக் கிடங்கு போல் காட்சியளிக்கும் இடம் என நிலைத்து விடாதீர்கள். உலகில் உள்ள மிகப் பிரம்மாண்டமான ஒரு தனியார் காடு என்று இதைச் சொல்கிறார்கள். இது எங்கே இருக்கிறது? அதன் சிறப்புகள் என்ன? ஆனந்த் அம்பானி நடத்தி வரும் இந்த வனவிலங்கு மறுவாழ்வு மையம் 3000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதுதான் உலகில் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை மற்றும் விலங்கு மறுவாழ்வு மையம். ஒரு மைக்ரோ சாஃப் நிறுவனத்தின் அலுவலகம் போலக் காட்சி தருகிறது. இதன் பெயர் 'வான்தார'. இதனை 'வனத்தின் நட்சத்திரம்' என்றும் அழைக்கிறார்கள். 'வான்தார' என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் சொந்தமான ரிலையன்ஸ் அறக்கட்டளை இதனை நிறுவியுள்ளது. இது குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜாம்நகர் அமைந்துள்ளது. விலங்குகள் குளிக்க நீச்சல் குளம், ஸ்பெஷாலிட்டி மருத்துவனை, அழகான குகை, விலங்குகள் ஓய்வு அறை, வனவிலங்குகளுக்காக ஸ்பா எனப் பல மோடிகளைக் கொட்டி ஆனந்த் உருவாக்கி இருக்கிறார். இங்கே காடுகளில் அடிப்பட்ட மிருகங்கள், உடல்நலக்குறைவு காரணமாகத் தவிக்கும் மிருகங்கள் என அனைத்தையும் கொண்டு வந்து அதிநவீன சிகிச்சை அளித்துப் பாதுகாத்து வருகிறார். குறிப்பாக அழிந்து வரும் வன விலங்குகளின் சரணாலயமாகவும் சமூக விரோதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அடைக்கலம் தருகிறது இந்த 'வான்தார'. இந்த வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை இந்த ஆண்டுதான் ஆனந்த் திறந்தார். அங்கே உண்மையான வனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்தனை விதமான மரங்களும் உள்ளன. யானை, மான், சிங்கம், புலி, சிங்கவால் குரங்கு, நீர்யானை, சிறுத்தை என 2 ஆயிரம் மிருகங்கள் உள்ளன. 43 வகையான ஊர்வன மற்றும் பறப்பன உள்ளன. அவற்றைக் கவனித்துக் கொள்ளவும் பராமரிக்கவும் நூற்றுக் கணக்கான ஊழியர்கள் உள்ளன. நல்ல உணவு, தரமான வசிப்பிடம் என ஏறக்குறைய இங்குள்ள மிருகங்கள் ராஜவாழ்க்கையை அனுபவித்து வருகின்றன. இது இந்தியாவில் உள்ள மிருகங்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் ஆதரவற்று தவிக்கும் அத்தனை ஜீவராசிகளையும் அரவணைக்கும் அரண்மனையாக உள்ளது. இங்கு உள்ள யானை பிரதிமா மற்றும் அதன் குட்டி மாணிக்லால் சிலரால் வதை செய்யப்பட்டுப் போராடி வந்தது. அதை மீட்டுக் கொண்டுவர 22 ஊழியர்கள் திரிபுராவுக்குச் சென்றன. இங்கே இப்போது சிறப்பாக பாதுகத்து வருகிறார்கள். அப்படிப் பல வனவிலங்குகள் உள்ளன. அதன் பின்னால் கண்களில் ரத்தம் வழிய வைக்கும் கதைகள் உள்ளன. பல விலங்குகள் ஊட்டச்சத்து கிடைக்காமல் சாகும் நிலையிலிருந்து மீட்கப்பட்டு இன்று அவை உயிர்பெற்று வாழ்வைத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கப்பட்ட, 'வான்தார' தனது வெற்றி பயணத்தில் 500 யானைகளைப் பராமரித்து வருகிறது. சுவாமி விவேகானந்தரின் கொள்கையான 'ஜீவ் சேவா' என்பதை உயிர்மூச்சாகக் கொண்டுள்ளது இந்த மையம். அப்படி என்றால், வள்ளலார் சொன்னதுதான். 'வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்' என்பதன் இன்னொரு அர்த்தம் 'ஜீவ் சேவா'. உலகில் எத்தனையோ வனவிலங்கு மறுவாழ்வு மையங்கள் ஒப்புக்கு உள்ளன. அதில் போதிய மருத்துவ வசதியோ, உணவுகளின் இருப்போ இருக்காது. ஆனால், இங்கே எல்லா வளமும் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கு விதை போட்டவர் ஆனந்த் அம்பானி.

Related Post