சென்னை: விசிக உடன் கூட்டணி வைக்க விஜய் வெளிப்படையாக முயன்றும் கூட தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்பதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். ஆனால் விசிக மட்டுமல்ல மற்ற சில கட்சிகளும் கூட விஜயுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லையோ என்று தோன்றுகிறது.
உதாரணமாக விஜயுடன் நெருக்கமாக இருந்த ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த நிலையில் விஜய் நீக்கப்பட்டு உள்ளார்.
திருமா அழுத்தத்தின் காரணமாகவே என்னுடன் ஒரே மேடையில் ஏறவில்லை. அவருடன் இதயம் இங்கேயேதான் இருக்கிறது என்றெல்லாம் விஜய் கூறி இருந்தார். அதை திருமா மறுத்தும் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்.. விஜய்க்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக திருமா எடுத்த முடிவு அமைந்துள்ளது. விஜய் ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. இதனால் விசிக - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
மற்ற கட்சிகளும் இல்லை: விசிக உடன் கூட்டணி வைக்க விஜய் வெளிப்படையாக முயன்றும் கூட தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்பதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். ஆனால் விசிக மட்டுமல்ல மற்ற சில கட்சிகளும் கூட விஜயுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லையோ என்று தோன்றுகிறது.
ஏற்கனவே சீமானும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தாலும்.. நடிகர் விஜயின் அரசியல் வருகையாலும் எனது வாக்குகள் குறையாது என்று தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே
விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள், என்று சீமான் தெரிவித்துள்ளார். முன்னதாக மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம்.. அரசியல் மேடை என்றாலே கொந்தளிப்பாக பேசுவது, உலக வரலாறு, கோட்ஸ்களை எம்பி 3 ஆடியோ போல பேசுவது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகர் விஜய்.
மதிமுக எதிர்ப்பு: இது போக மதிமுகவும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை நண்பர் விஜய், மதவாத சக்திகளுக்கு இடமளித்து விடக்கூடாது என்று திருச்சி எம்.பி. துரை வைகோ கூறியுள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு: இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே, தவெக உடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களுக்குள் சலசலப்பு, சங்கடம் இருந்தால் இந்த கேள்வியைக் கேட்கலாம். ஆனால், எங்கள் கூட்டணிக்குள் அப்படி எதுவும் இல்லை.
நாளைய தினமே வேறு ஒருவர் வந்து கட்சியை ஆரம்பிக்கலாம். அவரும் கூட்டாட்சி என்று சொன்னால்.. அதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா. இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. சிந்தாமல் சிதறாமல் அடுத்த தேர்தலைச் சந்திப்போம்.. நாங்கள் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, என்றுள்ளார்.
மற்ற கட்சிகள்: இது போக சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் ஆங்காங்கே விஜயின் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்ற செய்தி உண்மைக்கு முற்றிலும் புறம்பானது முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது என்று தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது, என்றெல்லாம் விஜய் கூறிவிட்டார். இதனால் எங்கே விஜய் தனித்து நிற்க போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.