சென்னை: இந்த நவீன உலகில் அனைத்துமே இணையம் என்று மாறிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது எல்லாம் இணையம் வாயிலாகவே நடைபெறுகிறது. அப்படி இருக்கும் சூழலில் இணைய வேகம் குறைந்தால் அதை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.
அத்தியாவசியமான பல நேரங்களில் இணையச் சேவை பாதிக்கப்பட்டுக் கடுப்பு ஏற்றும். அதுபோல நேரங்களில் இணையச் சேவையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.. ஈஸியாக இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இணையச் சேவை மெதுவாக இருப்பது ஆன்லைன் அனுபவத்தை நிச்சயம் பாதிக்கும்.. வேலையாக இருந்தாலும் சரி.. சில் செய்யும் போதும் சரி வேகமான இணையச் சேவை ரொம்பவே முக்கியமானதாகும். இனியும் இதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. இணையச் சேவையை ஈஸியாக எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா என எதுவாக இருந்தாலும் இணையச் சேவையை எப்படி அதிகரிக்கலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
இணைய வேகம்: பொதுவாக இணைய வேகத்தைப் பாதிக்க மூன்று காரணங்கள் இருக்கிறது. அதாவது இடம், நேரம் மற்றும் நெரிசல் என்று மூன்று காரணங்கள் இருக்கிறது.. அதாவது எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் மற்றும் நேரம் முக்கியமானது. மேலும், நீங்கள் இருக்கும் இடத்தில் எத்தனை பேர் ஒரே நேரத்தில் இணையச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம். இவை அனைத்துமே நமது இணையச் சேவையைப் பாதிக்கும்.
இணையச் சேவையை சில ஈஸியான டிப்ஸ்களை கொண்டு வேகத்தை அதிகரிக்கலாம். முதலில் மொபைலை ரிஸ்டார்ட் செய்யுங்கள். பலரும் ஏரோபிளைன் மோடில் போட்டால் போதும் என நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் ஏரோபிளைன் மோடில் போடுவதைக் காட்டிலும் மொபைலை ரிஸ்டார்ட் செய்வதும் வேகத்தை அதிகரிக்க உதவும்.
முதலில் செய்ய வேண்டியது: உங்கள் மொபைலில் இருக்கும் Cache பைல்ஸை அழியுங்கள்.. ஆம், கேச் பைல்ஸ் என்பவை உங்கள் மொபைல் ஸ்ட்ரோஜை மட்டும் பாதிக்காது. அது இணைய வேகத்தையும் பாதிக்கும்... இது மொபைலை மெதுவாக்குவது மட்டுமின்றி இணைய வேகத்தையும் குறைக்கிறது. நீண்ட காலமாக உங்கள் கேச் பைல்ஸை அழிக்கவில்லை என்றால் அது மொபைலின் இணையச் சேவையைக் குறைக்கும்.
இப்போது இருக்கும் மொபைல்கள் பல செயலிகள் பேக் கிரவுண்டில் ஓடினாலும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இணையச் சேவையும் பல செயலிகள் பேக் கிரவுண்டில் இருந்தாலும் வேகமாகவே இருக்கும் எனச் சொல்ல முடியாது. பல செயலிகள் இருந்தால் அது இணையச் சேவையைக் கணிசமாக மெதுவாக்கும். எனவே, பேக் கிரவுண்ட் செயலிகள் மீது கவனத்தை வையுங்கள்.
அடுத்தது இதுதான்: அடுத்து செயலிகளில் ஆட்டோ அப்டேட்டை ஆப் செய்து வைக்க வேண்டும்.. இது உங்கள் மொபைல் வேகத்தைக் கணிசமாகவே குறைக்கும்.. பின்னணியில் செயலிகள் ஆட்டோ அப்டேட் ஆகும் போது அது நீங்கள் மொபைல் யூஸ் செய்யும் போது இணைய வேகத்தைக் கணிசமாகப் பாதிக்கும். எனவே, ஆப்ஸ் ஆட்டோ அப்டேட் ஆவதை ஆப் செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கலாம். அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் தூங்கும் போது மொபைலை அப்டேட் செய்து கொள்ளலாம்.
சில குறிப்பிட்ட செயலிகளை அதிக இன்டர்நெட் எடுத்துக் கொண்டால்.. அப்போது இணையச் சேவை பாதிக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் அதற்குப் பதிலாக லைட் செயலிகளை நாம் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் செக் செய்துவிட்டு கடைசியாக நெட்வோர்க் செட்டிங்கை நாம் பார்க்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் நெட்வோர்க் செட்டிங்கால் பிரச்சினை வரும்.
இது ரொம்ப முக்கியம்: அதுபோன்ற நேரத்தில் Go to Settings > Mobile Networks > Network operator > Select automatically > Turn off செய்யுங்கள். பின்னர் நாங்களாகவே உங்கள் சிம் கார்டிற்கு ஏற்றபடி தேவையான நெட்வோர்க்கை தேர்வு செய்யுங்கள். மேலும், உங்கள் மொபைலில் 4ஜி அல்லது 5ஜி சேவை ஆனில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.