செப்டம்பர் மாத ராசி பலன்: வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்..

post-img

சென்னை: செப்டம்பர் மாதத்தில் ராஜ கிரகங்கள் வக்ர நிலையில் பயணம் செய்கின்றன. நவ கிரகங்களின் பயணம் மற்றும் பார்வைகளால்


மேஷம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் யாரெல்லாம் மகிழ்ச்சியை அனுபவிக்கப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.


மேஷம்: செப்டம்பர் மாதம் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் மேஷத்தில் குரு, ராகு, கடகத்தில் சுக்கிரன், சிம்ம ராசியில் சூரியன், புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி பகவான் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கிரகங்களின் வக்ர நிலையில் பலருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் சூரியன் சிம்ம ராசியில் 5ஆம் வீட்டில் இணைந்து இருப்பது புத ஆதித்யா யோகத்தை தருகிறது. மாத பிற்பகுதியில் செவ்வாய், புதன் கன்னி ராசியில் இணைகின்றனர். இந்த மாதத்தில் வேலையில் எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். டென்சன் இருந்தாலும் கடந்து விடுங்கள். சனியும் சூரியனும் சம சப்தம பார்வையாக இருக்கின்றனர்.


வேலை பளு அதிகரிக்கும்: உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பொருளாதார வரவு நன்றாகவே இருக்கும். திடீர் பண வருமானம் வரும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். கணவன் மனைவி இடையேயான பாச பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தோடு நேரம் செலவு செய்ய மகிழ்ச்சியான மாதம். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து அதிகரிக்கும். செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.


குரு பெயர்ச்சி பலன்: மேஷ ராசியில் குரு வக்ரம்.. செப்டம்பர் முதல் குபேர யோகம் பெறும் ராசிக்காரர்கள்
மகிழ்ச்சியான மாதம்: இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியமும் நிம்மதியும் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது. சுக்கிரன் நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். ராகுவின் தொடர்பினால் உங்களுக்கு குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் குரு, சுக்கிரன் சாதகமாக பயணம் செய்கிறது. பண வருமானம் உங்களுக்கு கிடைப்பதற்கு குரு பகவானும் சுக்கிரனும் உதவி செய்வார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.


திருமணம் கைகூடும்: உங்களின் வாழ்க்கைத் துணைவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையடைந்திருப்பது சாதகம். குல தெய்வ அருள் கிடைக்கிறது. வேலை செய்யும் இடத்தில் புரமோசனும் பதவியும் கிடைக்கும். அரசாங்க துறையில் வேலை செய்பவர்களுக்கு சுகமும் நிம்மதியும் தேடி வரும். திருமண சுப காரியம் கை கூடி வரப்போகிறது. காதலிப்பவர்களுக்கு ஏற்ற காலம். பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் கை கூடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு குருவின் அருளால் நல்ல ஆதரவு கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அற்புதங்கள் தேடி வரும். வாழ்க்கையில் சுக போகங்கள் தேடி வரும். கவலைகள் நீங்கும் காலம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் கூடியிருப்பதால் தைரியம் தன்னம்பிக்கை கை கூடி வரப்போகிறது. நல்ல சாதகமான கால கட்டமாக அமைந்துள்ளது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் வீட்டில் நடைபெறும் சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். காதல் மலரும் காலம். சிலரது வாழ்க்கையில் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணையை சந்திப்பீர்கள். தகவல் தொடர்பில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.


பண வருமானம்: தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் சுககிரன் புதன் பயணம் செய்வதால் வீடு, நிலம் வாங்குவதற்கு யோகம் வரும். செவ்வாய் பகவான் 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் கூடும். தாம்பத்ய உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் ராகு உடன் குரு பயணம் செய்கிறார். பண வருமானம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு கை கூடி வரும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சிலருக்கு புரமோசனும் கிடைக்கும். செப்டம்பர் மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.

 

Related Post