மதுரை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எச்.டி செட் டாப் பாக்ஸ்கள் விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து இதுதொடர்பாக டேக்டிவி (TACTV) சார்பில் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டும் வரும் நிலையில் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில கேபிள் டிவி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட் ஆப் பாக்ஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும், அந்த செட் டார்ப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
200க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. 140 ரூபாய் ஜிஎஸ்டி வரியுடன் சந்தா தொகை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டாலும் சில இடங்களில் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிற தனியார் நிறுவனங்களில் இருந்த ஆபரேட்டர்கள் அரசு கேபிள் சேவையில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து உயர் தொழில்நுட்பத்துடன் அரசு கேபிள் டிவிக்கு விரைவில் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மேலாளர்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மதுரையில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் நீண்டநாள் கோரிக்கையான HD செட்டாப் பாக்ஸ்களை கேபிள்டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயலாக்கம் செய்து ஆய்வு நடைபெற்றது. அதில், புதிய எச்டி செட்டா ப்பாக்ஸ்கள் ஒளிபரப்பை துவக்கி வைத்து, ஆப்ரேட்டர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர்," தமிழ்நாடு முழுவதும் மின் கம்பங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கேபிள் மட்டுமே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அரசு கேபிள் டிவியில் வெளியே சென்ற உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மீண்டும் அரசு கேபிள் டிவியில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும், அரசு கேபிள் டிவியில் தடையற்ற சிக்னல் வழங்கவும் மேலும் தடை ஏற்படும் பொழுது மாற்று ஏற்பாடாக Stand by சிக்னல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் இல்லாத பகுதிகளில் சந்தாதாரர்கள் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக சிக்னல் வழங்கப்படும் என்றார். மேலும், Android Box மற்றும் IP TV போன்ற உயர்தர சேவைகள் விரைவில் அரசு நிறுவனத்தில் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.