சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்காக UAN ஆக்டிவேஷன் செய்ய மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதற்கு முந்தைய காலக்கெடு டிசம்பர் 15 ஆகும. வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது இந்த காலக்கெடுவை ஜனவரி 15, 2024 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன், நவம்பர் 30 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
பொதுவாக EPFO சேவைகளை ஆன்லைனில் பெறுவதற்கு உலகளாவிய கணக்கு எண் (UAN) உள்ளது. இதை பயன்படுத்துவதற்காக முன் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். UAN என்பது 12 இலக்க எண் ஆகும், இது EPFO மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதை ஆக்டிவேட் செய்ய ஜனவரி 15ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதோடு EPFO உடன் இணைக்கப்பட்டு உள்ள வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும், இதனால் EPFO மூலம் பணம் வழங்கப்படும் போதெல்லாம், அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றப்படும். இதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதோடு மத்திய அரசு சுற்றறிக்கையின்படி குறிப்பிட்ட சிலர் பிஃஎப் தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு மூலம் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
1) சர்வதேச தொழிலாளர்கள்(IW), தங்கள் பணிகளை முடித்துவிட்டு ஆதார் பெறாமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள்.
2) நிரந்தரமாக வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்த மற்றும் ஆதார் இல்லாமல் குடியுரிமை பெற்ற இந்திய தொழிலாளர்கள்
3) நேபாள குடிமக்கள் மற்றும் பூட்டானின் குடிமக்கள் பணியாளர் வரையறைக்குள் வருபவர்கள் மற்றும் EPF & MP சட்டத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவில் வசிக்காதவர்கள் மற்றும் அதன் விளைவாக ஆதார் இல்லாதவர்கள்.
மேற்கண்ட உறுப்பினர்களிடம் ஏற்கனவே யுஏஎன் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு யுஏஎன் உருவாக்கப்பட வேண்டும் என்றாலும், இப்போது ஆதார் பெற முடியாததால், யுஏஎன் உடன் ஆதாரை இணைக்க வேண்டிய தேவை நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பல லட்சம் சந்தாதாரர்களுக்கு இருக்கும் புகார்களை சரி செய்யும் விதமாக இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளதாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்புகளில் தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்திக்கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.