சென்னை: சென்னையின் செயற்கைக்கோள் நகரங்களில் ஒன்றாக திருமழிசையை உருவாக்க உள்ளனர்.இதற்காக நிலங்களைத் எடுக்கும் திட்டத்தை CMDA அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கே மிகப்பெரிய செயற்கைக்கோள் நகரம் அமைக்க உள்ளன.
2019ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் அதன்பின் இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை. சென்னை நகரின் மேற்கு புறநகரில் உள்ள திருமழிசை செயற்கைக்கோள் நகரத்தில் அலுவலக இடம், ஷாப்பிங் மால் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. அதேபோல் குடியிருப்பு கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) சென்னையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிரமாண்ட நகரத்தை உருவாக்கி வருகிறது. விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர் இதுவரை உருவாக்கத்தை நிலையில் விரைவில் புதிய டிபிஆர் தயாரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
TNHB க்கு திருமழிசையில் 127 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் சுமார் 30 ஏக்கர் நிலம் நகருக்குள் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படும். சுமார் 20 ஏக்கர் வணிக இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு சென்னை பெருநகரப் பகுதிக்கு உட்பட்டது. இங்கே மேலும் நிலம் கையகப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சாட்டிலைட் சிட்டி: பெங்களூருக்கு அருகே சாட்டிலைட் சிட்டியாக வளர்ந்து.. அப்படியே உயர்ந்து நிற்கும் ஓசூர் நகரம்.. தமிழ்நாடு முழுக்க பல பகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. அந்த வகையில் சென்னைக்கு அருகே இதேபோல் சாட்டிலைட் சிட்டிகள் உருவாக்கப்பட உள்ளன.
சென்னையில் அதன்படி திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம் ஆகிய 6 செயற்கைக்கோள் நகரங்களை மேம்படுத்துவதற்காக நிலம் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சாட்டிலைட் சிட்டி மகாபலிபுரம் : இந்த நிலையில்தான் சென்னையின் திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம் ஆகிய 6 செயற்கைக்கோள் நகரங்களை மேம்படுத்துவதற்காக நிலம் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார், ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. , கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன.
Weather Data Source: Wettervorhersage 21 tage