பிரபஞ்சன் கூறுகையில், ”கடும் உழைப்பால் முழு மதிப்பெண் சாத்தியமாயிற்று. திட்டமிட்டு படித்ததால் 100% மதிப்பெண் கிடைத்தது.தொடர் பயிற்சியும் வெற்றியை சாத்தியமாக்கியது. யாராலும் முடியாது என்பது கிடையாது” என்று பிரபஞ்சன் கூறினார்.
மேலும் ,” நீட் எளிதானது என கூற முடியாது. நீட் தேர்வு கடினமானது தான். தன்னம்பிக்கைதான் முதலில் தேவையானது” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரபஞ்சன், மருத்துவராவது சிறுவயது கனவு இல்லை. உயிரியல் பிடித்ததால் மருத்துவத்தை தேர்வு செய்தேன். 720-க்கு 720 பெறுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் முழுவதும் படிப்பு படிப்பு என்று நான் இருக்கவில்லை. பொழுதுபோக்கிற்கும் நேரம் ஒதுக்கினேன் என்று பிரபஞ்சன் தெரிவித்தார்.
மேலும் பொழுதுபோக்கு குறித்த கேள்விக்கு பதலளித்த பிரபஞ்சன், எனக்கு பிடித்த சில பாடல்கள் கேட்பேன், செல்போனில் விளையாடுவேன். படிப்பும், பொழுதுபோக்கும் சம அளவிலேயே இருந்தது. அது தவிர பொன்னியின் செல்வன் நாவல் படித்துள்ளேன். கல்கியின் வருணனை மிகவும் பிடிக்கும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு படித்திருக்கிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவத் துறையில் என்ன செய்ய போறீர்கள் என்ற கேள்விக்கு, அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது ஆசை” என்று சாதனை மாணவர் பிரபஞ்சன் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.