ஐதராபாத்: தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்றும் ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம் என்றும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தெலுங்கானாவில் பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர் ராவ், ஹாட்ரிக் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். அதேவேளையில், எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் கொதிக்க ஆரம்பித்து உள்ளது. தேர்தல் பிரசாரத்தை பல வாரங்களுக்கு முன்பே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடங்கி விட்டன. அந்த வகையில், இன்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தெலுங்கனா மாநில அரசையும் முதல்வர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து தமிழ்நட்டு கோவில்கள் மாநில அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், "தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம்.
டெல்லிக்கே வந்து என்னிடம் பாஜக கூட்டணியில் சேர கெஞ்சிய தெலுங்கானா சிஎம் கேசிஆர்.. மோடி பொளேர் தாக்கு
சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை. கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள் வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சியிடம் காங்கிரஸ் பேசி கோவில்களை விடுவிக்குமா? இவ்வாறு மோடி பேசினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage