வேலை தேடுறீங்களா.. நேரா மாதவரத்திற்கு இன்னிக்கே போங்க! ஆஃபர் லெட்டருடன் வாங்க!

post-img

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை மாதவரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று அரசு சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தமிழகம் முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.


சென்னை மாவட்டத்தின் 2ஆவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மாதவரத்தில் உள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால்- அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.


இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்கள், பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கலை கற்றவர்கள் என அனைத்து விதமான நபர்களும் இலவசமாக பங்கேற்கலாம்.


தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படுவோரின் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.


மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 044-24615160 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ, pjpsantho[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

 

Related Post