டெல்லி: டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் எங்கெல்லாம் தங்க உள்ளனர் என்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டை இந்தியா இந்த முறை நடத்துகிறது. டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார். டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் எங்கெல்லாம் தங்க உள்ளனர் என்ற விவரங்களை பார்க்கலாம்.
அடேங்கப்பா! 400 ரூம்கள்..ஜோ பைடனுக்காக ரெடியாகும் தனி லிப்ட்.. மினி அமெரிக்காவாக மாறும் ஐடிசி ஓட்டல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார். வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர். அதேபோல், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் ரிஷி சுனக், டெல்லியில் உள்ள ஷாங்க்ரி ஓட்டலில் தங்க உள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சீன பிரதமர்( Premier) லி கியாங்க் பங்கேற்க உள்ளார். ஜோ பைடனை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டாக ஜி ஜின்பிங் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜி 20 மாநாட்டை சீன அதிபர் புறக்கணிப்பது இதுவே முதல் முறையாகும். சீன அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறார். பின்னர் டெல்லி வரும் ஜஸ்டின் ட்ரூடோ, லலித் ஓட்டலில் தங்க உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டணி அல்பனிஸ், மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் அல்பனிஸ், இந்தியாவுக்கும் வருகை தருகிறார். அவர் டெல்லியில் உள்ள இம்பிரியல் ஓட்டலில் தங்க உள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage