பெங்களூரு: தப்பான உறவு வேண்டாம் என்று சொன்னராம் மாமியார்.. அவ்வளவுதான், மருமகளுக்கு வந்துச்சு பாருங்க ஆத்திரம்.. இப்ப அந்த மேடம் ஜெயிலுக்குள்ளே போயிட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம், அந்த பாழாய் போன கள்ளக்காதல்தான்.
பெங்களூருவை அடுத்துள்ளது பத்தரஹள்ளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் மஞ்சுநாத்.., இவரது மனைவி பெயர் ராஷ்மி... மஞ்சுநாத் தன்னுடைய அம்மா, அப்பா, மனைவியுடன் வசித்து வந்தார்.
பரிதாபம்: இந்த நிலையில், கடந்த 5ம் தேதி மஞ்சுநாத்தின் அம்மா லட்சுமிம்மா, இறந்துவிட்டார்.. திடீரென அவர் இறந்ததால், மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக சொல்லப்பட்டது.. இதற்கு பிறகு, தன்னுடைய அம்மாவை நல்லடக்கம் செய்தார் மஞ்சுநாத்.
ஆனால், அடுத்த 4வது நாளே போலீசுக்கு ஓடினார்.. பத்தரஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், தன்னுடைய மனைவி மீது நிறைய சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை வேண்டும் என்றும் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் விசாரணை ஆரம்பமானது..
இதையடுத்து, ராஷ்டியிடம் விசாரணை ஆரம்பமானது.. போலீசாரின் கிடுக்கிப்பிடியில், மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.. போலீலசில் ராஷ்மி தந்த வாக்குமூலம் இதுதான்:
வாக்குமூலம்: "எங்க வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருக்கிறோம்.. இதனால், அக்ஷய் என்ற இளைஞர் எனக்கு பழக்கமானார்.. இருவரும் நெருக்கமானோம்.. ஆனால், அவருக்கு பணத்தேவை இருந்தது.. அதனால், அக்ஷய்க்கு நான் அடிக்கடி பணம் கொடுத்து வந்தேன். இதை என்னுடைய மாமியார் கண்டுப்பிடித்துவிட்டார்.. எதுக்காக பணம் தருகிறாய்? என்று கேட்டு என்னுடன் சண்டை போட்டார். இந்த உறவை கைவிடவில்லையானால், என் கணவரிடம் விஷயத்தை சொல்லிவிடுவதாகவும் மிரட்டினார்.
அதனால்தர்ன, மாமியரை தீர்த்துக்கட்ட நானும் அக்ஷய்யும் முடிவு செய்தோம்.. சம்பவத்தன்று மாமியாருக்கு பிடித்த, களி உருண்டையை செய்தேன்.. அதில், நிறைய தூக்க மாத்திரையை கலந்து, சாப்பாடு பரிமாறினேன்..
கள்ள ஜோடி: அதை சாப்பிட்டதுமே மாமியார், மயங்கிவிட்டார்.. அப்போது உள்ளே வந்த அக்ஷய், மாமியாரின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.. பிறகு, மாரடைப்பால் இறந்துவிட்டதுபோல, குடும்பத்தில் அனைவரையும் நம்ப வைத்தோம் என்றார்.. இதையடுத்து, இந்த கள்ளஜோடியை போலீசார் கைது செய்தனர்..
பணவிவகாரம்: எப்போதுமே வீட்டில் பண விவகாரத்தை மாமியார்தான் கவனித்து கொள்வாராம்.. ஆனால், கள்ளக்காதலனுக்கு பணம் தந்துவருவதால், பண விவகாரத்தை இனிமேல் தானே நிர்வகிப்பதாக ராஷ்மி சொல்லியிருக்கிறார்.. ஆனால், இதற்கு கணவரும், மாமியாரும் ஒப்புக்கொள்ளவில்லையாம்.. இந்த கோபமும் ராஷ்மிக்கு இருந்துள்ளது.
எனவே, மாமியாரை கொன்றுவிட்டால், கள்ளக்காதல் விவகாரம், அமுங்கிவிடும், பணநிர்வாகமும் தன் கைக்கு வந்துவிடும் என்று ராஷ்மி கணக்கு போட்டுள்ளார்.. ஆனால், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் மாமியாருக்கு மட்டுமல்லாமல், இவர்கள் வீட்டிலேயே முதல் மாடியில் குடியிருந்த ராகவேந்திரா என்பவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.. மாமியார் இறந்ததுமே, ராகவேந்திராவுக்கு ராஷ்மி மீதும், அதே முதல்மாடியில் குடியிருக்கும் அக்ஷய் மீதும் சந்தேகம் வந்துள்ளது.
ராகவேந்திரா: அதனால், யாருக்கும் தெரியாமல், அக்ஷய்யின் வீட்டிற்குள் நுழைந்து, அக்ஷய்யின் செல்போனை சோதனை செய்துள்ளார்.. அந்த செல்போன் மெசேஜ்களில், மாமியாரை கொலை செய்வதற்காக இந்த கள்ளக்காதல் ஜோடி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அதற்கு பிறகுதான், இந்த விஷயத்தை ராஷ்மியின் கணவர் மஞ்சுநாத்திடம் சொல்லி, வாட்ஸ்அப்பில் இருந்த மெசேஜ் ஆதாரங்களையும் காட்டியிருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ந்துபோன கணவர், போலீசுக்கு ஓடியிருக்கிறார்.
ஆக, களி செய்து மாமியாரை காலி செய்த மருமகளே, இப்போது களி தின்ன போய்விட்டார் என்பதுதான் இந்த கள்ளக்காதல் சொல்லும் பாடம்..!!