அப்படி போடு.. தமிழ்நாட்டில் பிரம்மாண்ட இவி வாகன தொழிற்சாலை..

post-img

சென்னை: ஃபாக்ஸ்கான் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். முக்கியமாக மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு உச்சத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்,.


கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.


முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.



அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.


1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.


கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.


அதன்படி 200 மில்லியன் டாலரை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாம் பாக்ஸ்கான். தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முதலீட்டை செய்ய உள்ளதாம். மின்னணு பொருட்களை உருவாக்கும் பிளாண்ட்களை இங்கே அமைக்க உள்ளதாம் பாக்ஸ்கான்.


புதிய முதலீடு: இந்த நிலையில்தான் அடுத்த அதிரடியாக ஃபாக்ஸ்கான் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Post