உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... 4 நாட்களுக்கு மழை.. வானிலை அலெர்ட்..

post-img

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய

வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. அது மேலும் வலுப்பெற்று

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 3 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை

38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2–4 டிகிரி செல்சியஸ்

அதிகமாக இருக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்

காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்

சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்

அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு

வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று

மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 4 ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 3 ஆம் தேதி வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்

அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்

இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல்

பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும்

இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

4 ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று

மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல்

பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும்

இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

5 ஆம் தேதி இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு

வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்

இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம்

அறிவுறுத்தியுள்ளது.

 

Related Post