இடி மின்னலுடன் பொளக்க போகுது கனமழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 17 மாவட்டங்களில்

post-img

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் பரவலாகவே மழை கொட்டி வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.. வட சென்னையில் பல இடங்களில் நேற்றைய தினம் கனமழை கொட்டியது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


17 மாவட்டங்கள்: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கொட்டும் கனமழை: எனவே, இந்த மாவட்டங்களில் இருப்போர் கவனமுடன் இருக்க வேண்டும். மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 17 மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று செப். 19 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வானிலை ஆய்வு மையம்: அதேபோல செப். 20 முதல் செப். 23 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செப்.24, 25 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 90 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல களியல் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), நாகுடி (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), மணியாச்சி (தூத்துக்குடி), மாதவரம் (திருவள்ளூர்) தலா 70 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.

 

Related Post