சீமான்! யார் யார்கிட்ட மன்னிப்பு கேட்பது? 15 நாளில் 'இதுதான்' நடக்கும்- வீரலட்சுமி

post-img

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் தம்மை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க கோரிய சீமான் நிபந்தனையை தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி நிராகரித்துள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வீரலட்சுமி, முக்தார் போன்றவர்களுக்கு என் வாழ்க்கையில் மன்னிப்பு கிடையாது. நீங்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது உரிய சான்றுகளைத் தர வேண்டும் என்றார்.


இதற்கு வீரலட்சுமி பதில் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ: விஜயலட்சுமி விஷயத்துல சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் என்னென்ன கதைகள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒரு அரை மணிநேரத்தில் விஜயலட்சுமி அத்தனை கதையையும் முடிசுட்டாங்க.


விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் ஆபாச படங்களை நாம் தமிழர் கட்சியினர் எனக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். இதனை காவல்துறைக்கு புகாராக தெரிவித்திருக்கிறேன்.

 

சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுவிட்டு போன பிறகு உங்கள் வழக்கு நல்ல படியாக முடிந்தது என நான் நினைத்தேன். ஆனால் சீமான் மீண்டும் விஜயலட்சுமியை ஏமாற்றி இருக்கிறார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.


சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, என்னுடைய வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு மன்னிப்பே கிடையாது என சொல்லி இருக்கிறார். நான் மன்னிப்பு கேட்கனும் என சொல்லி இருக்கிறார் சீமான். யார், யார் கிட்ட மன்னிப்பு கேட்பது? மானமே இல்லாத சீமான்! நீங்க என் மேல மான நஷ்ட வழக்கு போட்டுள்ளீர்கள். மானம் போனா உசுரு போனதுக்கு சமம்னு வாழ்கிற வம்சத்துல பொறந்த எனக்கு எவ்வளவு இருக்கும்?

 

வக்கிர புத்தி கொண்ட ஜோம்பிகள் புது வீடியோ வெளியிட்ட வீரலட்சுமி pic.twitter.com/RMVArXBXU1

சீமான் என் ஒருவர் மீது மட்டும்தான் மான நட்ட வழக்கு போட்டுள்ளார். ஆனால் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் 50 பேர் லிஸ்ட் என்கிட்ட உள்ளது. நான் உங்க அத்தனை பேர் மீதும் அவதூறு வழக்கு போடுவேன். 15 தினத்துக்குள் நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கனும். இவ்வாறு வீரலட்சுமி வீடியோவில் கூறியுள்ளார்.

 

Related Post