அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை...

post-img

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச் சென்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி காரில் மயங்கி நிலையில் இருந்ததால், ஸ்ட்ரெச்சர் மூலம் அமைச்சரை திமுக தொண்டர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post