குருப்பெயர்ச்சி 2025: செல்வம், தொழிலில் வரும் சூப்பர் மாற்றம்.. யோகம் பெறும் 5 ராசிகள் எது தெரியுமா?

post-img
குருப்பெயர்ச்சி 2025: குரு பகவான் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். குருப்பெயர்ச்சியால் இந்தப் புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது, தொழிலில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்காலம்... (Lucky Zodiac Signs 2025 Jupiter Transit) 2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி கிரகத்தைவிட குரு பகவான் மெதுவாக பயணிப்பார் என்பதால் மிதுன ராசியில் 13 மாதங்கள் சஞ்சாரம் செய்யவுள்ளார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதிவார். ஞானக்காரகன், கல்விக்காரகன், தானக்காரகன், வேலைக்காரகன், செல்வக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். (GuruPeyarchi 2025) இந்த குருப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏகபோகமான நற்பலன்களை அள்ளித் தரப்போகிறார் குருபகவான். அந்த வகையில், இந்த ஆண்டு எந்நெந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் சேரும், அவரின் பார்வையால் யாருக்கெல்லாம் முன்னேற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். வரும் 2025 புத்தாண்டில் குரு பகவான் மிதுன ராசிக்கும், அதிசாரமாக கடக ராசிக்கும் பெயர்ச்சியாகி மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். மே 14 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்கும் மாறுகிறார். நவம்பர் 11 ஆம் தேதி கடக ராசியில் இருந்து குரு வக்கிர பெயர்ச்சியாகிறார். டிசம்பர் 5 ஆம் தேதி வக்கிரப் பெயர்ச்சியில் உள்ள குரு மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதைத்தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுன ராசியில் மீண்டும் நேர்முகமாக பெயர்ச்சியாக தொடங்குகிறார். குருவின் பார்வையால் கோடி நன்மைகள் பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். 5, 7, 9 ஆகிய இடங்களில் குரு பகவான் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியவர். ராசிக்கு இரண்டாம் இடத்திலும், 11 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் அற்புதமான பலன்களை குரு பகவான் தருவார். அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டில் குரு பகவான் நற்பலன்களை அள்ளித் தரப் போகிறார் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. ரிஷபம் (Guru peyarchi for rishabam): வரும் புத்தாண்டில் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைவதால் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் குருப்பெயர்ச்சி நடக்கவுள்ளது. இந்தப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும். திடீர் பண வரவு, பொருளாதார மேம்பாடு உண்டாகும். தொழில், அலுவலக வேலைகளில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தொழில் ரீதியான பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து பெரிய அளவிலான முன்னேற்றத்தை காண்பீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி அடைவீர்கள். முயற்சி செய்யும் அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடியும். பொன், பொருள் என அனைத்து செல்வங்களும் சேரும். ஆடம்பரமான வாழ்க்கை இருக்கும். சிம்மம் (Guru peyarchi for Simmam): 2025 புத்தாண்டில் குருப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் குருவின் மாற்றம் நடக்கிறது. வேலை, தொழிலில் சூப்பரான லாபங்களைப் பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததைவிட லாபம், வருமானம் அதிகரிக்கும். இலக்குகளை சரியாக திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலைகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு முடிப்பீர்கள். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆனாலும், சிம்மத்திற்கு 2025 புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குவதால் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. புதிய முதலீடு, சேமிப்பு செய்வதை கவனமாகச் செய்ய வேண்டும். துலாம் (Guru peyarchi for Thulam): துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை விழுவதால் அனைத்து நல்ல பலன்களையும் உங்களுக்குத் தரப் போகிறார். ராசிக்கு 9 ஆம் இடத்தில் குருவின் பெயர்ச்சி நடைபெறுவதால் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைகளில் முன்னேற்றம் காண்பீர்கள். அடுத்தடுத்த வேலைகளில் தொடர்ந்து வெற்றியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கி நிம்மதியுடன் வாழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனுசு (Guru peyarchi for Dhanusu): தனுசு ராசிக்காரர்களின் ராசி அதிபதியான குரு பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இந்த ஆண்டில் நடைபெறும் குருப் பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கவுள்ளது. கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம், அன்பு, ஆதரவு, இணக்கம் உண்டாகும். தொழில், வியாபரத்தில் பங்குதாரர்களின் உதவியால் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அலுவலகங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களுக்கான பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து வெற்றி காண்பீர்கள். கும்பம் (Guru peyarchi for Kumbam): கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி பகுதி நடக்கிறது. குரு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த குருப்பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ் வந்து சேரும். சனி பகவானால் இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுபட்டு குருவின் பெயர்ச்சி மாற்றத்தை உங்களுக்கு பெரிய மாற்றத்தை தரும். வேலை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில்கள், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். காதலர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான மற்றும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஏழரைச் சனி நடப்பதால் புதிய தொழில், முதலீடு போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்பட வேம்டும். துறை வல்லுநர்களுடனான ஆலோசனை பெற்று தொழில், முதலீட்டைத் தொடங்குவது நல்லது.

Related Post