சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பலத்த கன மழை பெய்த நிலையில் தற்போதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று (19.06.2023) சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது.
அதேபோன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.