பணமே தங்கவே மாட்டீங்குதுனு வருத்தப்படுவரா?.. இந்த மாற்றத்தை மட்டும் பண்ணுங்க பணம் கொட்டும்

post-img
பணம் கையில் இருப்பதே இல்லை, செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுவராக நீங்கள் இருப்பின் இந்த சிறிய மாற்றங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அந்த வகையில், வாஸ்து சாஸ்திரப்படி என்ன மாற்றங்களை செய்தால் பணம் பெருகும் என்று இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் பணம் என்பது முக்கியத் தேவையாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்காக இன்று பலரும் கடினமான உழைப்பை போடுகின்றனர். நாள் முழுவதும் பம்பரம் போல பணத்துக்காக சுழன்று கொண்டிருக்கின்றனர். ஆனாலும், மாதக் கடைசியில் பலரும் கடன் வாங்கும் சூழ்நிலையிலும், கிரெடிட் கார்டுகளையும் நம்பியே பலர் உள்ளனர். எத்தனை சம்பாதித்தாலும் பத்தவே மாட்டீங்குது. எங்கே தான் பணம் போகுதுனு தெரியலை, பர்ஸில் பணம் தங்கவே மாட்டீங்குது என்றுதான் பலரும் புலம்புகின்றனர். பணத்தை வைக்க நாம் பயன்படுத்தும் பொருள்களில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே பணம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரங்கள். அந்த வகையில், என்னென்ன மாற்றங்களைச் செய்தால் பணம் பெருகும், பண வரவு அதிகரிக்கும் என்று இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. தங்களுடைய மணி பர்ஸுகளில் பலரும் தங்களுக்குப் பிடித்தமான தெய்வத்தின் படங்களை வைப்பது வழக்கம். பர்ஸை எடுக்கும்போது கடவுளின் அனுக்கிரகத்தோடு எடுக்கலாம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், வாஸ்து தர்மத்தின்படி இதுபோன்று தெய்வம் அல்லது குருவின் படங்களை பர்ஸில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கின்றனர். பர்ஸ் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் குடும்ப புகைப்படைத்தை வைத்திருப்பது நல்லது. அதேபோல, ஸ்வஸ்திகா சின்னம், ஓம் சின்னம் போன்றவற்றை பர்ஸில் வைக்கலாம். ஆனால், அவை நல்ல புகைப்படமாகவும், செழிப்பான புகைப்படமாகவும் இருக்க வேண்டும். சிதைந்த நிலையில் இருக்கும் படங்களை பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற படங்களை பர்ஸில் வைப்பதால் பணம் வீகாது என்றும், மாறாக பணம் இரட்டிப்பாக பெருகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, பர்ஸில் பணம் மற்றும் நாணயங்களை குவித்து வைக்காமல் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பது நல்லது. தேவையற்ற காகிதங்கள், பில்கள் போன்றவை வைப்பதை தவிர்த்து பணம் மட்டும் வைத்திருப்பது நல்லது. பர்ஸில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்றி விடுங்கள். பணத்தை வைக்கப் பயன்படுத்தப்படும் பர்ஸ், பைகள் போன்றவற்றில் சதுரமான தங்கம் அல்லது பித்தளையை வைத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும். இந்த சதுர துண்டை கங்கை நீரால் சுத்திகரிக்கலாம். இதனை பர்ஸில் வைப்பதன் மூலம் செல்வம் பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசி தொடர்பான விஷயங்களையும் பர்ஸில் வைக்கலாம். பர்ஸ் பயன்படுத்துவோர் கருப்பு நிறத்தை தவிர பிரவுன், கிரே உள்ளிட்ட எந்த கலரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கருப்பு சனிக்கு பிடிக்காத நிறம் என்பதால் உங்கள் சனி நன்றாக இல்லையெனில் கருப்பு நிற பர்ஸின் மூலம் பல்வேறு பணப் பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது. அப்புறம் என்ன இந்த சின்ன சின்ன விஷயங்களைக் கடைப்பிடித்து உங்கள் செல்வத்தைப் பெருக்க முயற்சி செய்யுங்கள்..

Related Post