முடிவுக்கு வரும் சுந்தரி சீரியல்.. ஆனால் கடைசியில் டுவிஸ்ட்.

post-img

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருங்க சுந்தரி சீரியல் இன்னும் ஒரு சில எபிசோடில் முடிவுக்கு வர போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் முடிவுக்கு வரும் சுந்தரி சீரியலில் எதிர்பாராத ஒரு டுவிஸ்ட் காத்திருக்கிறது.
அதாவது சுந்தரி சீரியல் முடிவடைந்ததும் இரண்டாவது பாகம் தொடங்க போகிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது.
சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதை பலருடைய மனங்களை கவர்ந்தது. அதாவது சாதிப்பதற்கு அழகும் நிறமும் தடை இல்லை, வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் துரத்திக் கொண்டு வந்தாலும் நம்முடைய எண்ணம் முழுக்க ஒரே இலக்கை நோக்கி இருந்தால் வெற்றி பெற்று விடும் என்பது தான் சுந்தரி சீரியலில் மையக்கருத்தாக இருந்தது.

 


புடவையால் வெளிவந்த நடிகை தேவயானி ரகசியம்.. அந்த நேரத்திலே அப்படியாம்.. அடடே சொல்ல வச்சிட்டாங்களே
ஆனால் கதை நகரத் தொடங்கிய பிறகு சுந்தரிக்கு திருமணம் நடந்தது. அதுவும் அவருடைய கணவர் இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்த நேரத்தில் கட்டாயமாக சுந்தரி கழுத்தில் தாலி கட்ட வைக்கப்பட்டது. பிறகு சுந்தரியின் கணவர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகவும் ஆகி இருந்தார். ஒரு கட்டத்தில் சுந்தரிக்கு தன்னுடைய கணவர் இன்னொரு பெண்ணை கல்யாணம் முடித்து இருப்பது தெரிந்தாலும் அதை சொன்னால் அணுவின் நிலைமை மோசமாகிவிடும் என்று மறைக்க தொடங்கி இருந்தார்.


அதுவும் இரண்டு வருடங்களாக கர்ப்பமாக இருந்த அணு கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுந்தரி, சோதனை மேல் சோதனைகளை தாண்டி பல கஷ்டங்களை பட்டுக்கொண்டிருந்தார். ஒரு வழியாக அனுவிற்கு இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்து இருக்கிறது. அதே நேரத்தில் இப்போது அனுக்கு மொத்த உண்மைகளும் தெரிய வந்த நிலையில் இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
அதே நேரத்தில் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதாநாயகி கேப்பிரில்லா செல்லஸ் நடிக்க அவருடைய கணவராக ஜிஸ்னு மோனன் மற்றும் இரண்டாவது கதாநாயகியாக ஸ்ரீ கோபிகா நீலநாத் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வருவது குறித்து ரசிகர்கள் பலர் நல்லவேளை சீக்கிரமாக இந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று கருத்து கூறி வருகிறார்கள். ஒரு சிலர் சீரியல் முடிவது குறித்து வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.


 விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 4 முக்கிய சீரியல்கள்? உங்களுக்குப் பிடித்த "அந்த" சீரியலும் இருக்கு
இந்த நிலையில் சுந்தரி சீரியல் முடிவடைந்ததும் இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்ற செய்திகள் பரவி வருகிறது. காரணம் டிஆர்பியில் சுந்தரி சீரியல் நல்ல இடத்தில்தான் இருந்து வருகிறது. டாப் 10 இடங்களில் நான்காவது அல்லது ஐந்தாவது இடங்களில் இந்த சீரியல் தொடர்ந்து வருவதால் மீண்டும் இரண்டாவது சீசன் தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் சமீபமாக காலமாக முதல் சீசனில் அதிகமான வரவேற்பு பெற்ற சீரியல் கூட இரண்டாவது சீசனில் படு தோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் இந்த சீரியல் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post