கோயம்புத்தூர் பக்கம் கவனத்தை திருப்பிய TATA குழுமம். இதுதான் காரணமா..?

post-img

டாடா குழுமம் அனைத்து துறையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் தற்போது செலவுகளை குறைக்கவும், அதேநேரத்தில் அதிகப்படியான லாபம், வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று வேகமாக வளரும் 2ஆம் தர நகரங்களில் அதிகப்படியான வர்த்தகத்தையும், அலுவலகத்தையும் கொண்டு செல்வது தான்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் வேகமாக வளரும் பகுதிகளாக கண்டறியப்பட்ட ஓசூர் மற்றும் கோயம்புத்தூரில் அடுத்தடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது டாடா குழுமம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே மாபெரும் ஐபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைந்துள்ளது.
இதே தொழிற்சாலைக்கு அருகே புதிதாக கட்ட திட்டமிடப்பட்டு உள்ள செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்க நிலம் தேடும் பணிகளை துவங்கியுள்ளது டாடா குழுமம். நீலம் தேடும் பணிகளை முடிந்தால் OSAT தளத்தை அமைக்கும் பணிகள் துவங்கும் டாடா குழுமம் துவங்கும்.

                                                                               Tata Group - Wikipedia 

இதேவேளையில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 திட்டங்களை டாடா குழுமம் செயல்படுத்த போவதாக டிவிட்டரில் கோயம்புத்தூர் அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தாக டாடா குழுமம் புதிதாக 2 தலைமையகத்தை உருவாக்க உள்ளதாக தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி டாடா எலக்ட்ரானிக்ஸ் - செமிகண்டக்டர் பிரிவான OSAT-க்கு தொழிற்சாலை அல்லது அலுவலகத்தை அமைக்கப்பட உள்ளது. டாடா டெக்னாலஜிஸ் - ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறைக்கான Common Facility Centre (CFC) அமைக்க திட்டமிட்டு வருகிறது.

இதேபோல் டாடா டெக்னாலஜிஸ் புதிய ஐடி அலுவலகத்தையும் கோயம்புத்தூரில் அமைக்க காத்திருக்கிறது, மேலும் டாடா பவர் நிறுவனம் கோயம்புத்தூரில் எலக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் காத்திருக்கவும்.

திடீரென கோயம்புத்தூர் பக்கம் டாடா குழுமம் கவனத்தை செலுத்த என்ன காரணம். பொதுவாக பெரு நகரங்களில் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் கவனத்தை செலுத்தும், ஆனால் கொரோனாவுக்கு பின்பு 2ம் மற்றும் 3ம் தர நகரங்களில் வர்த்தகம், முதலீடுகள் அதிகரிக்க துவங்கியது. இந்த திடீர் வளர்ச்சியை பணமாக்க டாடா குழுமம் கோயம்புத்தூரில் ரீடைல் வர்த்தகம் முதல் அனைத்து புதிய வர்த்தகத்தையும் இம்மாவட்டத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. சிறு நகரம் என்பதால் ரியல் எஸ்டேட் முதல் அனைத்து செலவுகளும் குறைவு, இது கார்பரேட் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.


Related Post