Gold Rate Today: சென்னையில் தங்கம் விலையில் வீழ்ச்சி! நகைப்பிரியர்கள் காட்டில் மழைதான் போங்க!

post-img
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.24) சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 56,720-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து இரு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று விலையும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து, ஒரு சவரன் ரூ 56,720-க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 7090-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையாகிறது. சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,800-க்கும் ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 22 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் டிசம்பர் 21 ஆம் தேதி விற்பனையான விலைக்கே விற்கப்பட்டது. அதாவது இன்று ஒரு சவரன் 56,800-க்கும் ஒரு கிராம் ரூ 7,100-க்கும் விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும் ஒரு சவரன் ரூ 56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கு விற்பனையாகிறது. சென்னையில் டிசம்பர் 20-ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் ஒரு சவரன் ரூ 56,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 98-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ 65 குறைந்து கிராம் ஒன்று ரூ 7070-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் குறைந்து ரூ 99-க்கு விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையானது. சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது. டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச தங்கம் விலை: இந்த டிசம்பர் மாதத்தில் இவ்வளவு குறைந்து இருப்பது, நேற்றுதான். முன்னதாக கடந்த கடந்த 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7090க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு நேற்றைக்கு தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நடப்பு டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 11 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7285 வரை சென்றுள்ளது. நவம்பர் மாதத்தில் எவ்வளவு இருந்தது?: கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 7385 ரூபாய் வரை விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 7065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் தங்கம் விலையில் சரிவு: அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சென்னையில் தங்கம் ஒரு கிராம் 7,455 -க்கு விற்பனையானது. இது அதிகபட்சமாகும். அது போல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஒரு கிராம் 7.025 -க்கு விற்பனையானது. இது குறைந்தப்பட்ட விலையாகும்.

Related Post