சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனனியும் சக்தியும் சேர்ந்து கம்பெனி தொடங்கப் போவதாக தன்னுடைய அம்மாவை அழைக்க அதற்கு குணசேகரன் அவமானப்படுத்துகிறார்.
அதே நேரத்தில் கரிகாலனும் ஆதிரையும் ஹனிமூன் போவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் குணசேகரனை எதிர்த்து பேச துணிவில்லாமல் வீட்டிற்குள் இருந்த பெண்கள் இப்போது அடுத்தடுத்து தைரியமாக எதிர்த்து பேச துணிந்து விட்டார்கள். அதே நேரத்தில் தங்களுடைய புது பிசினஸ் செய்யும் தொடக்கியும் வருகிறார்கள் ஏற்கனவே நந்தினிக்கு கேட்டரிங் பிசினஸ் ஜனனியால் கிடைத்திருக்கிறது.
அதுபோல ரேணுகாவிற்கும் டான்ஸ் கிளாஸ் மற்றும் ஆன்லைன் கிளாஸ் என அவரும் தன்னுடைய பாதையில் நடக்க தொடங்கி இருக்கிறார். அதேபோல ஈஸ்வரி ஏற்கனவே தர்ஷன் படிக்கும் காலேஜில் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆக சேர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் இப்படியே இருந்திரக்கூடாது அடுத்ததாக புது இடத்தை பார்த்து தங்களுடைய பிசினஸை பெரிதாக ஆரம்பிக்க வேண்டும் என்று நேற்றைய எபிசோடில் அப்பத்தா மருமகள்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் அப்பத்தாவை கொலை செய்வதற்காக குணசேகரன் புது பிளான் போட்டுக் கொண்டிருக்க, கில்லி வளவன் மீண்டும் குணசேகரன் மற்றும் கதிரோடு சேர்ந்து இருக்கிறார். ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்றும் இவர்கள் எடுத்திருக்க முயற்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் நாம கம்பெனி தொடங்குவதற்கு கேட்டிருந்த லோன் நமக்கு கிடைத்துவிட்டது என்று கதிர் ஜனனியிடம் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் ஹாலில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது குணசேகரன் கதிரிடம் எந்த ஊரில் கரிகாலன் ஆதிரை ஹனிமூனுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கா என்று கேட்க, அதற்கு கதிர் கொடைக்கானல் தான் என்று சொல்ல ஐய.. என்று கரிகாலன் இளக்காரமாக பேச, அதற்கு உன் மூஞ்சிக்கு நீ என்ன லண்டனுக்கு போனுமோ என்று ஞானம் திட்டுகிறார்.
அதற்கு கரிகாலன் நீங்க அப்படியே அனுப்பி வச்சிருவீங்க. நீங்க சும்மாவே எச்சி கையால காக்கா ஓட்ட மாட்டீங்க என்று அவமானப்படுத்த, அந்த நேரத்தில் ஜனனியும் சக்தியும் மாடிக்கு வருகின்றனர். அப்போது அங்கு இருக்கும் விசாலாட்சி இடம் அம்மா நாங்க புது கம்பெனி ஆரம்பித்து இருக்கோம். நல்ல நாள் பார்த்து சொல்றியா என்று கேட்க, அதற்கு விசாலாட்சி சந்தோஷமாக பார்த்து சொல்றேன் ஐயா என்று சொல்கிறார்.
எதிர்நீச்சல்: அப்பத்தாவுக்கு தெரிய வந்த உண்மை.. மாட்டிக்கொண்ட கதிர்.. ஜனனிக்கு கிடைத்த அதிர்ச்சி
இதை பார்த்து கோபமான குணசேகரன் யாரு வீட்டுல வந்து யாரு கடையை போடுறது? என்று திட்ட, அனைவரும் கோபத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இனி ஜனனி மற்றும் சக்தியின் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வு விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சக்தி மற்றும் ஜனனிக்கு இன்னும் அதிகமான டயலாக் இருந்தால் சீரியல் நன்றாக இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சாப்பாடு விஷயத்தில் கோதையிடம் வெறுப்பை காட்டும் தமிழ்.. தவிக்கும் சரஸ்வதி..இனி நடக்கப்போவது இதுதானா?