தேவையானவை :
சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
தக்காளி -500 கிராம்
தயிர் - 1கப்
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் போடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 150 கிராம்
இஞ்சி - 1 1/2 ஸ்பூன்
பூண்டு - 1 1/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா - 1 1/2 கப்
ப. மிள்காய் - 5
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் - 500 கிராம்
தணியா பொடி-1 தேக்கரண்டி
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
- ஒரு பெரிய கடாயில் எண்ணையுடன் நெய் ஊற்றி பாதி வெங்காயம் நறுக்கிப் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும் பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் .ஆகியவற்றை போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
- பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி மீதி கொத்த மல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும். சிக்கன் நன்றாக வெந்த்தும் எண்ணைய் மேல் வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்
- தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும். அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டவும். அரிசியை போட்டு நன்றாக கிளரவும். அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்க வேண்டும்.
- முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை குறைக்கவும் பாதி எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும். சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி தம்மில் போடவும் 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.
Ingredients for Bangalore Special Briyani :
Chicken-1kg
Rice-1kg
Oil-100g
Tomato-500g
Curd-1cup
Red Chili Powder-11/2 tbsp
Turmeric Powder-1/2 tbsp
Ghee-150g
Ginger(paste)-11/2 tbsp
Garlic(paste)-11/2tbsp
Coriander leaves-1cup
Mint-11/2cup
Green Chilly-5
Cinnamon,Bay Leaf,Cloves,Cardamom-as needed
Onion-500g
Coriander powder-1tbsp
Color Powder-little bit
Lemon-1
Ghee-1tbsp.
Method to make Bangalore Special Briyani :
1.Heat oil along with ghee in a pan,add onion and let them to get golden color.Keep aside them from pan.Put cinnamon,cloves,bay leaf and cardamom in a pan.when they get splutter ,add ginger paste ,onion,little bit coriander and mint leaves and stir them.
2.Add green chilly,red chilly powder,turmeric powder and salt.when its get color add chicken,curd,coriander powder,1/2 lemon juice,tomato,remaining coriander leaves and mint leaves. Allow them to cook well. when chicken cooked well ,add water(for 1cup of rice 1&1/2 hot water is sufficient) and boiled well.
3.when water boiled well, add color powder.Soak rice for before 20 minutes and drain them well.Add rice and stir them very frequently.Allow high flame untill rice get half cooked.
4.when rice cooked 3/4th stage ,slow the flame and add lemon juice.Cover pan in a cloth and cook it further on low flame for 10minutes.Briyani is ready to serve.