மும்பை: இன்று மும்பையில் நடக்கும் இந்தியா தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பற்றி பேச வாய்ப்புகள் உள்ளனர்
இன்று காங்கிரஸ் எம்வி ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் எம்வி ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. 'நியாய சங்கல்ப் பாதயாத்ரா' என்ற பெயரில் நடைபெறும் யாத்திரை நிறைவு பெறுகிறது.
மும்பையில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை இறுதி நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நிறைவு விழா நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.
கடுமையாக பாதிக்கப்பட்ட காங்கிரஸுக்கு இந்த யாத்திரை ஓரளவிற்கு உதவியது.
இரண்டாம் கட்ட யாத்திரை: இந்த நிலையில் 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார். மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் மேற்கொண்டார்.
இன்று இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடந்தார்.
பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்தில் யாத்திரையை தொடங்கிய அவர் அசாமில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும், அருணாச்சலப் பிரதேசம், மேகலாயாவில் தலா ஒரு நாள், மேற்கு வங்கத்தில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 523 கி.மீ தொலைவும், பீகாரில் 4 நாட்களில் 7 மாவட்டங்களில் 425 கி.மீ தூரம், ஜார்கண்டில் 8 நாட்களில் 13 மாவட்டங்களில் 804 கி.மீ என பயணம் மேற்கொண்டார்.
இன்று காங்கிரஸ் எம்வி ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று மும்பையில் நடக்கும் இந்தியா தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பற்றி பேச வாய்ப்புகள் உள்ளனர்
தேர்தலுக்கு பின் தொடங்கு சட்டசபை அமைந்தால் யாரை பிரதமராக்குவது என்று ஆலோசனை செய்ய வாய்ப்புகள் உள்ளன.