சந்திரனின் தென்துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இது படிப்படியாக பல்வேறு கட்டங்களை அடைந்து, சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றடைந்தது.
மேலும் சந்திரயான்-3 விண்கலம் சுற்றிவரும் வட்டப் பாதையின் உயரத்தை இரண்டாவது கட்டமாக விஞ்ஞானிகள் குறைத்தனர். சந்திரனின் வட்டப் பாதையில் குறைந்தபட்சம் 170 கிலோமீட்டர், அதிகபட்சம் 4,313 கிலோமீட்டர் தொலைவில் சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வந்தது. நிலவுக்கு அருகில் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 4 ஆயிரத்து 313 கிலோ மீட்டர் தொலைவிலான சுற்றுப்பாதையில் விண்கலம் சுற்றி வந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நிலவை அடையும் சந்திராயன்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வரும் 14 ஆம் தேதி சுற்று பாதை தொலைவை குறைக்கும் நகர்வு நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை கொண்டு செல்வது தான் மிக முக்கியமான கட்டம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். சந்திரயான் 3 விண்கல பயணம் திட்டமிட்டபடி நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் லேண்டர் வரும் 23ஆம் தேதி நிலவில் கால் பதிக்கிறது.
நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை கொண்டு செல்வது தான் மிக முக்கியமான கட்டம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். சந்திரயான் 3 விண்கல பயணம் திட்டமிட்டபடி நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் லேண்டர் வரும் 23ஆம் தேதி நிலவில் கால் பதிக்கிறது