பொங்கல் மளிகை தொகுப்பு.. கூட்டுறவு சங்கங்கள், அமுதம் அசத்துதே.. ரேஷன்தாரர்களுக்கு வருது குட்நியூஸ்?

post-img
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும்சூழலில், மளிகை தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தமிழக ரேஷன்தாரர்களின் ஆர்வத்தையும் பன்மடங்காக பெருக்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமாகும். அந்தவகையில், வரப்போகும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொகுப்பு குறித்து, இப்போதே மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட துவங்கிவிட்டது. ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் என்பதால், இந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இம்முறையும் ரூ.1000 வழங்கப்படுமா அல்லது ஏற்கனவே வழங்கியதுபோல 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. யாருக்கு கிடைக்காது: எப்படி பார்த்தாலும், அரசு வழங்கும் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைவருக்குமே கிடையாது... மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், பொருளில்லா அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், ஆகியோருக்கு இது வழங்கப்படாது என்றே சொல்கிறார்கள். இந்நிலையில், கூட்டுறவுத்துறை பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்து நேற்றுமுன்தினம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. இது ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு அல்ல, மாறாக கூட்டுறவுத்துறையால் தனியாக விற்பனை செய்யப்படுபவையாகும்.. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 3 தொகுப்புகளாக வழங்கப்பட இருக்கிறது. இந்த மூன்றிலும் வெவ்வேறு மளிகை பொருள்கள் இடம்பெற்றிருக்கும். பொங்கல் தொகுப்பு: அதன்படி சாதாரண பொங்கல் தொகுப்பு 99 ரூபாய்க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு 499 ரூபாய்க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு 999 ரூபாய்க்கும் விற்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், பிரதம மந்திரி கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம், சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் பொங்கல் பரிசு தொகுப்பை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், பொங்கல் மளிகை தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை, கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. கூட்டுறவு அங்காடி: அதாவது, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் சில கூட்டுறவு சங்கங்கள், மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள், மாவு வகைகள் போன்றவற்றை தயாரிக்கின்றன. இவைகள்தான், கூட்டுறவு அங்காடிகளிலும் விற்கப்படுகின்றன. அந்தவகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு அங்காடிகளில், 199 ரூபாய், 499 ரூபாய், 999 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்புகள் விற்கப்பட உள்ளன. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள மஞ்சள் தூள், மசாலா துாள், மாவு பொருட்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சேலம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று, அங்காடிகளை நடத்தும் அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளதாம். செம வருவாய்: அதேபோல, உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகமும், அமுதம் அங்காடிகளில் பொங்கல் மளிகை தொகுப்பை விற்க உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து இந்த மளிகை தொகுப்பை வாங்க அரசு உத்தரவிட்டால், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலைக்கு வாங்குவது தடுக்கப்படுவதுடன், கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாயும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Related Post