கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதல்முறையாக நடந்துள்ளது போலும்.. பணி மோதல் காரணமாக 2 பெண் அதிகாரிகளும் மோதிக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில், தமிழரசி என்பவர் விஏஓ-வாக பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வருகிறார்.
விஏஓ தமிழரசி: இந்நிலையில், நேற்று அதாவது டிசம்பர் 16ம் தேதி விஏஓ தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டு, கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா சென்றுவிட்டாராம். இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழரசி, "கதவை பூட்ட வேண்டாம்" என்று அலறியிருக்கிறார்.. ஆனால், அவரது கதறலை துளிகூட தமிழரசி மதிக்காமல் சென்றாராம். இதனால், மேலும் ஆத்திரமடைந்த தமிழரசி, "இப்படி செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்..
பிறகு, "கதவைத் திறந்து விடு, இல்லாவிட்டால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன்" என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், தமிழரசி இப்படி சத்தம் போட்டு கூப்பிட்டும்கூட, சங்கீதா அதனை மதிக்காமல், ஃபைல்களை எடுத்து கொண்டு, "உன்னால் முடிந்ததை பார்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய பைக்கில் கிளம்பி சென்று விட்டார்.
வீடியோ காட்சி: இவையெல்லாம் வீடியோ காட்சிகளாக இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. சிறைபடுத்தப்பட்ட அறைக்குள் மாட்டிக்கொண்ட தமிழரசி, இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.. இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.. அதற்கு பிறகே அரை மணி நேரம் கழித்து, சங்கீதா பூட்டை திறந்துவிட்டாராம்.
ஏற்கனவே, விஏஓ தமிழரசிக்கு, சங்கீதாவுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறதாம். இவர்கள் 2 பேரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது... இப்போது, உச்சக்கட்டமாக அறைக்குள் வைத்து சங்கீதா பூட்டிய சம்பவம் குறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளாராம் தமிழரசி.
கோரிக்கைகள்: இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..!!!