தமிழகத்தில் 19 ஆயிரம் செல்போன் எண்கள் முடக்கம்.

post-img

தகவல் தொழில்நுட்ப வசதியால் தற்போது தொலைத்தொடர்பு, பண பரிமாற்றம் என பலவும் தற்போது எளிதாகிவிட்டது. அபரிமிதமான தொழில் நுட்ப வளர்ச்சியால் எத்தனையோ நன்மைகள் கிடைத்தாலும் மோசடி செயல்களும் ஒருபக்கம் புது புதுசாக முளைக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளன.

டெல்லி வீரர்களின் திருடுபோன பேட்கள் மீட்பு! சிக்கிய 2 பேர்! ஆனாலும் வருத்தத்தில் வார்னர்! அச்சச்சோ செல்போனில் தொடர்பு கொண்டு பணம், பரிசு பொருள் விழுந்து இருப்பதாக ஆசை வார்த்தை கூறி மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர். அதேபோல், வங்கி கணக்கில் பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து ஓடிபி எண் கேட்பது.. அஜாக்கிரதையாக இந்த விவரங்களை கொடுத்தால் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மொத்தமாக சுருட்டி விடுவது என சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

 

மெசேஜ் வழியாக லிங்க் அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்தால் அடுத்த நொடியே போனின் மொத்த செயல்பாடுகளையும் கட்டுக்குள் எடுக்கும் சில சாஃப்ட்வேர்கள் மூலமாகவும் மோசடி நடைபெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் தற்போது செல்போன் எண் மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்யும் அளவிற்கு வசதிகள் பெருகிவிட்டது. இதனால், சைபைர் கிரம் குற்றங்களும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் செல்போன் எண்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கியது.

 

இந்த இணையதளத்தில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இந்த செல்போன் எண்களை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு முடக்கப்படும்.

இந்த இணையதளத்தில், தமிழகத்தில் சைபர் மோசடியில் தொடர்புடைய செல்போன் எண்களை சைபைர் கிரைம் போலீசார் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் தமிழ்நாட்டில் குற்ற செயல்களில் தொடர்புடைய சுமார் 20,197 செல்போன் எண்களை முடக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

 

இவற்றை ஆய்வு செய்து சுமார் 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாடு சைபைர் கிரைம் போலீசார்தான் அதிக எண்களை முடக்குவதற்கு பரிந்துரை செய்து இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. சைபர் கிரைம் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் மோசடி வேலைக்கு பயன்படுத்தப்படும் செல்போன்கள் எண்கள் முடக்கப்பட்டுள்ளதால் சைபர் கிரைம் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post